பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மங்கையின் மனநிலை డ్డి இது கைக்கிளை தலைவி நெஞ்சொடு கிளத்தல், இனக்கம் : வாருயர் பெண்ணை-நீண்டு உயர்ந்த பன. வருகுகும்பை - அரும்புகின்ற குரும்பை (வினைத்தொகை குரும்பை இனங்காய், சாதாரண மாகக் கவிஞர்கள் மகளிரின் கொங்கைகட்குப் பனையின் குரும்பைக%: உவமையாகக் கூறுவது இலக்கிய மரபாக இருக்து வருகின்றது. ஏரிய ஆயினும் - வனப்பு வாய்ந்தனவாக இருப்பினும், ஏர் அழகு எழுச்சி, என் செய்யும் என்ன பயன் கூரிய கோட்டு ஆனைத் தென்னன் - கூர்மையான கொம்புகளிையுடைய பட்டத்து யானையின்மீது பவனி வரும் பாண்டியனின், குளிர் சாந்து அணியகலக் கோட்டு மண் - அழகிய மார்பிலே பூசியுள்ள குளிர்ச்சியைத் தரும் சந்தனத்தின்மீது எழுதப்பெற்றுள்ள குங்குமச் சாங்தை, கொள்ளா முலை - எடுத்துக்கொள்ளாத கொங்கைகள். - கோட்டுமண் கொள்ளல்: காதலி, காதலனது மார்பினைத் தழுவித்தன் கொங்கைகளால் உழுது அங்குள்ள சாந்தம் கலவை முதலிய ஈறும்பொருள் களைத் தன்னகத்தே கொண்டு விளங்குதல்.

  • தோட்டுவண் டொலியல் மாலைத் துடியிடை மிகவி ராய்ந்த

மோட்டுவெண் முத்தம் மின்னும் முகிழ்முலை உழுது சாந்தங் கோட்டுமண் கொண்ட மார்பங் கோதைகள் குளித்து மூழ்கிக் கோட்டுமண் கொள்ள நின்குள் குரிசில்கண் கொள்ள நின்குள் : என்ற சிந்தாமணிப் பாடலால் கோட்டுமண் கொள்ளலேப்பற்றி அறியலாம். இது சீவகனது தோழருள் ஒருவளுன சலநிதி என்பான் கட்டியங்கானது சேனையுடன் பொருததைக் கூறுகின்றது. மகளிர் தம் முலைகளால் உழுது கோட்டுமண் கொண்ட மார்பினச் சலநிதியின் மாலையணிந்த வாள் துாேத்துத் தன் நுனியில் தசையைக் குத்திக் கோட்டு மண்ணை எடுத்தது என்றவாறு, - (38)

  • சீவக சித்தா-229 4. -- -