பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[42] சொல்லாமற் சொல்லுக! அன்று அவள் கெடு நேரம் உறங்கவில்லை. மனக்குழப்பத் துடன் அவள் படுத்துப் படுக்கையில் புரண்டுகொண்டிருக்கின்ருள். அன்று மாலையில் அவள் பட்டத்து யானையின்மீது உலா வந்த பாண்டியனைக் கண்டதுதான் காரணம். யானை விரைவாகச் சென்ற தால், அவள் அவனே நன்ருகக் கண்குளிரக் கண்டு களிக்க முடிய வில்லை. பாண்டியனும் பொது நோக்காக அவள் இருக்கும் பக்கம் பார்க்கின்றன். அவளும், நம்மைத்தான் மாறன் நோக்குகின்ருன் ; நம்மீது காதல் கொண்டு நம்மையே மணந்துகொள்வான் ' என்று எண்ணுகின்ருள். அந்தக் காதல் மயக்கமே அவளை உறக்கம் கொள் ளாமற் தொல்லைப் படுத்துகின்றது. அவளது ஆருயிர்த் தோழி, ஏனம்மா, இவ்வாறு தளர்ந்து இருக்கின்ருய்?' என்று வினவுகின் ருள். அவள் தோழிக்கு உற்றதுரைத்து, அவளைப் பாண்டியனிடம் தூதுபோகுமாறு வேண்டுகின்ருள். பாண்டியனிடம் என்ன சொல்ல வேண்டும்? என்பதை இவ்வாறு அவள் உணர்த்துகின்ருள். தோழி, எனது கிலேயைத் தென்னவனிடம் தெரிவிக்க வேண்டும். இன்ன தெருவில் இன்னுருடைய மகள் என்ற என்னைப் பற்றிய விவரங்கள் ஒன்றையும் அவனிடம் சொல்லாதே; அப்படிச் சொன்னல், நாணமற்றவள்! அதற்குள்ளாக இவ்வாறெல்லாம் சொல்லிவிட்டிருக்கின்ருள் என்று அவன் கினைத்தல்கூடும். என் பெயரையும் புலப்படுத்தாதே ; புலப்படுத்தினால், கானும் அவனைப் பார்த்தேன் அவளும் என்னைப் பார்த்தாள் ; இதற்குள் செய்தி வெளிப்பட்டு விட்டதே தூதும் வந்து விட்டதே' என்று அவன் எண்ணுதல் கூடும். என் ஊரைப்பற்றியும் உரையாதிருக்கக் கட வாய். ஏனெனில், நான் பார்த்தது ஊரெல்லாம் பரவிவிட்டதோ! ' என்று கருதி இந்த எண்ணத்தையே கைவிடுதலும் கூடும். நம் அன்னை இன்ன தன்மையள் என்பதையும் சொல்லற்க. சொன்னல், என் காதலை அன்னையும் அறிந்துகொள்ளுமாறு நான் கடந்து