பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகப்பட்ருக்கொண்டான் கன்வன் ! குழந்தைமணம்தான் பாவனையுலகில் திளைக்கும் என்று கருத வேண்டியதில்லை. சில சமயம் பருவமங்கையரின் மனமும் அந்தப் பாவனையுலகில் புகுவதுண்டு அந்தப் பாவனே புலகில் நிகழும் செயல்கள் யாவற்றையும் நாம் புரிந்துகொள்வது சிரமம். அவை நமக்கு விளக்கம் தந்தால் நாம் நற்பேறுடையவர்களாவோம். சூடிக் கொடுத்த சுடர்க்கொடி கண்ணனைப் பாவனையுலகில் அனுபவிக்க வில்லையா ? நம்மையும் பாவனை யுலகிற்கு மாற்றிக்கொண்டால்தான் அத்தகைய அனுபவங்கள் நமக்குத் தெளிவாகும். X 区 区 தென்னவன் தெருவழியாக உலா வருங்கால் தெரிவை யொருத்தி அவனைக் காண்கின்ருள்: அக் காட்சி அவளுடைய காத லுக்கு வித்திடுகின்றது. அன்று முதல் அவன்மீது ஆராக்காதலுடைய வளாகின்ருள். அவள் உணவையும் சரியாக உட்கொள்வதில்லை : உறக்கமும் அவளுக்கு நன்ருக வருவதில்லை. உடல் மெலிந்துபோகின் றது. ஒரு நாள் மாலையில் தோட்டத்தில் உலவிக்கொண்டிருக்கும் பொழுது அவளுடைய வளையல்கள் கழன்று விழுந்து விடுகின்றன. அதைக்கூட கவனியாமல் வீடு செல்லுகின்ருள். அன்றிரவு அவளுக்கு உறக்கம் சரியாக வரவில்லை நெடுநேரம் கழித்து சிறிதுகண்ணயர்கின் ருள். கனவில் பாண்டியன் வருகின்றன் வளையல்களைக் கழற்றி மறை கின்ருன் சட்டென விழித்துக்கொண்டு கையைத் தடவிப் பார்க் கின்ருள் நங்கை வளையல்கள் காணப்பெறவில்லை. செவிலித் தாயர்கள் மறுநாள் அவளே நீராட்டிப் பூச்சூட்டி ஒப்பனை செய்யும் பொழுது அவர்களிடம் பாண்டியனின் செயலேக் கூறுகின்ருள். அவர் களும் எதையோ கினைத்துக்கொண்டு தம் மகள் இங்கனம் உளறுகின் ருள் என்று எண்ணிக்கொண்டு அவளுக்குச் சமாதானம் சொல்லிச் செல்கின்றனர்.