பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[50] ஏங்கிய நெஞ்சம் இன்று நெல்ல மாவட்டத்தில் திருச்செந்துனருக்கு அருகி லுள்ள தொற்கை என்னும் ஊர் அக்காலத்தில் கடற்கரையோரமாக இருந்தது. அங்குள்ள கடலில் முத்துக் குளித்து அம் முத்துக்களை உல்கெங்கும் அனுப்பி வந்தனர். உரோமாபுரி, சீனம், கிரேக்கநாடு ஆகிய இடங்கட்குக் கொற்கை முத்து சென்றது. அந்தக் கொற்கை பாண்டியனின் ஆட்சியிலிருந்தது. சில சமயம் பாண்டியன் மதுரையி லிருப்பான்; சில சமயம் கொற்கையிலுமிருப்பான். - -. 冀 瓦 烹调 அந்தக் கொற்கையில் வாழும் ஒருத்தி ஒருநாள் பாண்டியனைக் காண்கின்ருள்; காதல் கொள்ளுகின்ருள். ஒருநாள் மாலை அவளும் அவளுடைய ஆருயிர்த் தோழியும் உலாவ வருகின்றனர். தலைவி மன அமைதியின்றி கடலலை வீசும் மணல் திட்டருகில் அமர்ந்து அலைகளை உற்று கோக்கிய வண்ணமிருக்கின்ருள். அவளுடைய தோழி அங்குமிங்கும் உலவி வருகின்ருள். பெரிய அலை ஒன்று ஓ’ வென்று இரைந்துகொண்டு வருகின் றது; அவள் இருக்கும் தி ட்டை யும் விழுங்கிவிடுமோ என்ற அளவுக்கு உயர்ந்து வருகின்றது. அந்த அலை அவள் கால் வரையி லும் எட்டிவிட்டுப் போய் விடுகின்றது. இப்பொழுது அருகிலுள்ள மணல் மேட்டில் சங்கு ஒன்று கிடக்கின்றது; அது வயிறு உளந்து நெளிந்து ஒரு முத்தை யீன்று அந்த மணல் மேட்டில் வைத்துவிட்டுப் பின்பு மெதுவாக நகர்ந்து மணல் மேட்டின் விளிம்பருகில் செல்லு கின்றது. ஒரு பேரலே வந்தால் தானும் அந்த அலையோடு கடலுக்குள் சென்று விடலாம் என்று காத்திருக்கின்றது. இதைத் தலைவி காண் கின்ருள். சங்கின் கிலக்கு இரங்குகின்ருள்.