பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏங்கிய நெஞ்சம் 1 : 7 இங்கிலேயில் உலவப்போன தோழி அவளுடைய பின்புறமாக வந்து அவளது இரண்டு தோள்களையும் பிடித்துக் குலுக்கி, ' என்ன, மெய்மறந்து ஆழ் க் த சிந்தனையிலிருக்கின்ருயே?’ என்று வினவுகின்ருள். - தோழியின் கூற்ருகக் கவிஞர் புனைந்த சொல்லோவியம் இது: உசூவாய் நிலத்த துயர்மனன்மே லேறி நகுவாய்முத் தீன்றசைந்த சங்கம் - புகுவான் திரைவரவு பார்த்திருக்குந் தென்கொற்கைக் கோமான் உரைவரவு பார்த்திருக்கு நெஞ்சு, இது கைக்கிளை தலைவி தோழியிடம் உரைப்பது. விளக்கம் : உகுவாய் கிலத்த மணல் உதிர்கின்ற கடற்கரை விளிம் பில், உயர் மணல் மேல் ஏறி உயர்ந்த மணல் மேட்டின்மீது ஏறி. ககுவாய் முத்து ஈன்று ஒளிவிட்டு விளங்கும் முத்தினை அந்த மணலில் ஈன்றுவிட்டு. அசைந்த சங்கம் நகர்ந்து செல்லும் சங்கு. புகுவான் . திரும்பவும் கடலி னுள் புகுவதற்காக, திரை வரவு பார்த்திருக்க-சேய்மையில் வரும் பேரலையை எதிர்நோக்கி யிருக்க, தென் கொற்கைக் கோமான் - பாண்டியன். உரை வரவு பார்த்திருக்கும் நெஞ்சு . காதலுரையின் வரவை எதிர்பார்த்து ஏங்கு கின்றது எனது கெஞ்சம். இப்பொழுது பாண்டியன் வந்தால் தன்னையும் முத்தையும் அடைவானே என்பது அவளுடைய கினப்பு. -புகுவான் திரைவரவு பார்த்திருக்கும் தென்கொற்கைக் கோமான் உரைவரவு பார்த்திருக்கும் நெஞ்சு என்ற அடிகளை மீட்டும் மீட்டும் பாடினல் தலைவியின் ஏக்க பாவம் வெளிப்படுவது தெரியும். பாடும்போது வெளிப்படும் கமது இரக்க பாவம் அதனுடன் தழுவும். பாட்டை அனுபவிப்பதற்கும். ஊழ் வேண்டும்! - (49)