பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[51] வாடை விரு துது இயற்கை வளம் செறிந்து விளங்குவது பாண்டியநாடு, தென் பாண்டி நாட்டில்-இன்றைய திருநெல்வேலி மாவட்டத்தில்-உள்ள மேற்கு மலைத்தொடர்தான் இதற்கு எடுத்துக்காட்டு. இதுவே பொதியமலைச் சாரல் என்பது குற்ருலமும் பாவகாசமும் இந்த மலைச் சாரலில்தான் அமைந்துள்ளன. ஆடவரும் பெண்டிரும் கார்த்திகைத் திங்களில் இவ்விடங்கட்குச் சுற்றுலாச் சென்று மனப்புற விருந்து (Picnic) உண்டு மகிழ்ச்சியாகக் காலங் கழிப்பர். அருவியருகிலும் சுனைகளினருகிலும் மரத்து நீழலில் சமையல் செய்வர். இத்தகைய காட்சிகளை இன்றும் நாம் காணலாம். X 烹调 Y. மாறன் மதுரையிலிருந்து பரிவாரங்களுடன் பொழுதுபோக்காகப் பொதியமலைச் சாரலுக்கு வருகின்ருன். அங்குமிங்கும் உலவி இயற்கைக் காட்சிகளைக் கண்டு களிக்கின்ருன் அரசன் என்ருல், ஆடம்பரங்களுக்குக் குறைவா? பாண்டியன் அமைத்த இடத்திற்குச் சற்று வடப்பக்கம் தள்ளி மற்ருெரு குடும்பமும் வந்து தங்கி இருக் கின்றது. அந்த குடும்பத்தைச் சார்ந்த பருவமடைந்த கங்கை பொருத்தியும் வந்திருக்கின்ருள். - அட்டில் தொழில் அழகாக நடைபெறுகின்றது. இயற்கைக் காட்சிகளையும் மலை வளத்தையும் கண்டு களிக்க உலாவி வந்த பொழுது பொறுக்கி வந்த சந்தனச் சுள்ளிகளையும் பட்டு முறிந்த சந்தனச் சிராய்களையும் விறகாகப் பயன்படுத்திச் சமையல் செய்கின் றனர். இதனுல் முகாம் எங்கும் சந்தன நறுமணங் கமழ்கின்றது. நறுமணத்துடன் அட்ட உணவை உள்ளங் களிக்க, உணர்ச்சி பொங்க, உண்டு உலவுகின்றனர். அதைத் தவிர அவர்கட்கு வேறு என்ன வேலை இருக்கின்றது ?