பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[53] வாடை தரும் தொல்லே நாம் பிறந்தநாள்தொட்டு நம்மைக்கோள்களும் விண்மீன்களும் இயக்குகின்றன என்பது ஒளி நூல் (சோதிட நூல்) வல்லாரின் கொள்கை. நம்முடைய அன்ருடச் செயல்களும் பிறவும் அவற்ருல் தான் நடைபெறுகின்றன என்பது அவர்களது துணிபு. காம் தாய் வயிற்றிலிருந்து பிறக்கும்பொழுது எந்த நாள் - மீனின் ஒளி கமது உடலில் வந்து தாக்குகின்றதோ அந்த ஒளிதான் நம்மை வாழ்நாள் முழுதும் இயக்கிக்கொண்டு போகின்றது என்று அவர்கள் கூறு கின்றனர். மானிட இனம் தலைமுறைத் தலைமுறையாக இந்தக் கொள் கையில் நம்பிக்கை வைத்து வாழ்ந்து வருகின்றது. நோய்வாய்ப் பட்டார்க்கு அவர்களது பிறந்த நாளில் நோய் மிகுதி யாதலும் சிலசமயம் அவர்களைக் கொன்றே விடுதலும் இயல்பு, இஃது ஒளி நூலின் துணிபு. யாராவது ஒருவர் நோயுற்றுக் கிடக்கும் பொழுது அவரது பிறந்த நாள் வந்து இடையிட்டால் உற்ருரும் உறவினரும் மிகமிக அஞ்சுவதை இன்றும் காணலாம். : ஐயோ, இந்த நாள் முழுவதும் எவ்வாறு கழியுமோ? நல்லபடியாகக் கழிய வேண்டும்! என்று ஏக்கங்கொண்டு இறைவனே வாழ்த்துவர் ; எல் லோரும் ஒரே மனத்துடன் வேண்டுவர். சிலர் தமது பிறந்தநாளன்று கோயில்களில் அபிடேகம், அருச்சனை முதலியவைகஜன் கடத்தி வருவதை இன்றும் நாம் காணலாம். இன்னும், மதியின் ஒளி உடலில் தாக்கில்ை பிணி குறைவதையும், அதன் ஒளி குறையக் குறைய நோய் அதிகரிப்பதையும் அனுபவத்தில் காணலாம். அமாவாசை யன்று நோய் அளவுகடந்து மிகும். இதல்ை நோயுற்றவர்கள் விட்டில்

  • வங்கப் பிரதமர் பி. சி. ராய் என்பார் தமது எண்ப நாளன்று (1-7-52) மறைந்தது ஈண்டு சிந்திக்கத்தக்கது.

த்தொன்ருவது பிறந்த