பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 முத்தொள்ளாயிர விளக்கம் இருந்தால் பெரியோர்கள் கிறைமதி, குறைமதி நாட்களைக் கவனிக் கும் வழக்கம் இன்றும் நடைமுறையில் இருந்து வருகின்றது. 苓 叉 翠 யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே என்று சொல்வர். பட்டத்து யானே பலவிதமாக அணி செய்யப்பெற்று அதன் இருபுறங்களிலும் அழகான மணிகள் தொங்கவிடப்பெற்றுள் ளன. அந்த யானையின்மீது ஏறிப் பாண்டியன் உலா வருகின்றன். யானையின் மணியோசை கேட்டு கங்கை யொருத்தி வீட்டினுள் ளிருந்து ஓடோடியும் வந்து கதவருகில் கின்றுகொண்டு பாண்டியன எட்டிப் பார்க்கின்ருள். மணியானேயின்மீதுள்ள மாறனைக் காண் கின்ருள். மாறனது அழகு, அவன் யானேயின்மீது வீற்றிருக்கும் சிறப்பு, யானையின் பெருமித கடை இவை யாவும் அவளது மனத்தில் பதிகின்றன; மாறன்மீது மால் கொள்ளுகின்ருள். காதல் வளர்கின் றது; எல்லையில்லாது வளர்கின்றது. என்ன செய்வாள் பாவம் ? அது கூதிர்காலம்; சதா வாடை வீசிக்கொண்டிருக்கும் காலம், மாலை நோரத்தில் வாடைக் காற்று சீறிச் சீறி வீசுகின்றது. எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றியதுபோல் அவளுடைய காதல் நோய் பின்னும் அதிகமாகின்றது. வாடைக் காற்று அவளைக் கொன்றுவிடும் போலிருக்கின்றது. பிணிவாய்ப்பட்டாரைப் பிறந்த நாளன்று அப் பிணி அதிகமாக வருத்துவது போலவே, வாடை தன்னை மிகவும் வருத்துவதாகக் கருதுகின்ருள் அங்கங்கை; அதனைக் கண்டு மிகமிக அஞ்சுகின்ருள். அச்சமயம் அவளுடைய ஆருயிர்த் தோழி அவளிடம் வருகின்ருள்; தோழியிடம் அவள் தனது நிலையை எடுத்துரைக் கின்ருள். . . தலைவி தன் நிலையைத் தோழிக்கு எடுத்துரைப்பதுபோலக் கவிஞர் புனைந்த சொல்லோவியம் இது : பிணிகிடந் தார்க்குப் பிறந்தநாட் போல வணியிழை யஞ்ச வருமால்-மணியான மாறன் வழுதி மணவா மருண்மாலேச் சீறியோர் வாடை சினந்து.