பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[54] நாணுேகு பிறந்த நங்கை பிரிறன் மாற்றருடன் போர் செய்யப் போயுள்ளான். காட்டி லுள்ள மக்கள்யாவரும் போரின் முடிவைப்பற்றியே எண்ணிக்கொண் டிருக்கின்றனர்; வெற்றியுடன் திரும்பவேண்டுமென்று ஆண்டவனை வேண்டி கிற்கின்றனர். இங்கிலையில் பாண்டியன் பகைவரை வென்று வாகை சூடி ஊர் திரும்புகின்றன் : தன்னை மக்கள் கண்டு மகிழவேண்டும் என்று மாலையில் தெருவழியே உலா வருகின்றன். வழுதியின் வீரச்செயல்களைக் கேள்வியுற்றிருந்தாள் கங்கை யொருத்தி. இப்பொழுது உலாவில் அவனே நேரில் காண்கின்ருள். அவனது பெருமிதத் தோற்றத்தில் ஈடுபடுகின்ருள். அவன்மீது மால் கொள்ளுகின்ருள். காதல் கடலாகப் பெருகுகின்றது. அவள் வாழும் இல்லத்தின் வழியாகப் பாண்டியன் அடிக்கடிக் குதிரையின் மீது செல்வது வழக்கம். அதல்ை அவனைச் சந்திக்கவும், கண்டு பேசவும் நல்ல வாய்ப்பு இருந்தது. அவள் தோழிமாருடன் மகிழ்ச்சி யாக இருக்கும்பொழுது பாண்டியன்மீது கொண்டுள்ள காதல் மயக் கத்தால் எப்படி எப்படி எல்லாமோ வானக்கோட்டைகளைக் கட்டிப் பேசுவாள். ஆனால், அவள் தனித்து இருக்கும்பொழுது பின் வருமாறு சிந்திக்கின்ருள் : நெஞ்சொடு பேசுகின்ருள் :

  • பகைவர்களைப் போரில் வென்று திரும்பிய பாண்டியனைக் காணுதபொழுது அவனைப்பற்றி ஆயிரம் எண்ணங்கள் என் மனத்தில் முளைக்கின்றன. அவன் பெருமைகளைப் பாராட்டிப் பேசு கின்றேன். உலா வருங்கால் என்னைப் பார்க்கக்கூடாதா? என்ளுேடு உரையாடக் கூடாதா? யானே முதலில் பேசட்டும் என்ற சோதனையா? என்று இப்படி ஆயிரம் சொல்ல கினைப்பேன். ஆனல், அவனை நேரில் காணுங்கால் அவனுடைய வைரமாலையைக் கேட்பதெங்கே ! அவனுடைய மார்பினைத் தழுவுவ தெங்கே? நான் பிறந்தபோதே என்னுடன் பிறந்த இந்த நாணம் எங்கிருந்தோ வந்து அனைத்தையும் தடுத்துவிடுகின்றதே!” என்கின்ருள்.