பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீணுகக் கழிந்த இரவு! $ 33 கங்கை தனது அனுபவத்தைத் தோழியிடம் கூறும் பாணியில் கவிஞர் புனைந்த சொல்லோவியம் இது: யானுடத் தானுணர்த்த யானுணர விட்டதற்பின் ருது. பாலுணர்த்தத் தானுணரான்-தேனு:று கொய்தார் வழுதி குளிர்காந் தணியகல மெய்தா திராக்கழிந்த வாறு. இது கைக்கிலோ; தலைவி தோழியிடம் கூறுவது. விளக்கம் : ஊட - பிணங்க, உணர்த்த சமாதானம் பண்ண. யான் உணராவிட்டதற்பின் கான் தெளியாமல் உதறித் தள்ளியபிறகு. தேன்ஊறு கொய் தார்-தேன் ஊதும் பொழுதே மலர்களைக் கொய்து தொடுக்கப்பெற்ற மாலை. வழுதி - பாண்டியன். சாந்து . சக்தனம். அகலம் - மார்பு எய்தாதுஅடையாமல், இராக்கழிந்த ஆறு இரவு முழுதும் வீணுகப்போன விதம் இது. 'எய்தாது இராக் கழிந்தவாறு என்ற இறுதியடியில் கங்கையின் ஏக்கம் பொங்கி வழிகின்றது. அந்த அடியைத் திரும்பத் திரும்ப உணர்ச்சியுடன் படித்தால் இந்த ஏக்க பாவம் தட்டுப்படும். (55)