பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#38 முத்தொள்ளாயிர விளக்கம் காவ லுழவர் களத்தகத்துப் போரேறி நாவலோஒ வென்றழைக்கு நாளோதை-காவலன்றன் கொல்யான மேலிருந்து கூற்றிசைத்தாற் போலுமே நல்யானைக் கோக்கிள்ளி நாடு. இது கோக்கிள்ளியின் நாட்டுவளங் கூறுவது. விளக்கம் : காவல் உழவர் கெற்களத்தில் களஞ்சியத்திற்குக் காவல் இருக்கும் உழவர்கள். களம் - நெல்லடிக்கும் இடம். போர் - இங்கு வைக் கோற் போரைக் குறிக்கின்றது. நாவலோஒ - ஏர்க்களத்திலும் போர்க்களத் திலும் தத்தம் பகுதியினரைக் கூவி அழைக்கும் குறியீட்டுச் சொல். காளோ தை நாள் செய்வதற்கான மங்கல வாழ்த்தொலி ; காலேப்பொழுதில் இசைக்கப்படுவது. காவலன் தன் அரசனது (சோழனது), கொல் யானை - போருக்குரிய கொம்பன். கூற்று இசைத்தாற்போலும் . தம் பகுதியினரை அழைத்தாற்போலும், கல்யானைக் கோக்கிள்ளி நாடு - யானப்படைகளை அதிகமாக உடைய கிள்ளியின் நாடு. ஏர்க்களங் காப்போர் நெற்போரின்மீது ஏறிக்கொண்டு கூவி பழைத்தல் போர்க்களங்காப்போர் களிற்றின் மீதிருந்து கொண்டு விளிப்பதை ஒக்கும் என்பது கவிஞரின் குறிப்பு. காட்டு வளத்தைக் கூறும் பாடலில் வீரமும் தொனிக்கின்றது. (1) (பா வே.) 3. கடுங்களத்துப் 5. காவலோர் ; 5.6 நாவ லெனவழைக்கு.