பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[. 7 } } சாளரத்தில் கெண்டைகள் ! பாடலம்' என்பது சோழனுடைய குதிரையின் பெயர். ஒரு நாள் சோழன் அதன்மீது ஏறி உலா வருகின்றன். கையில் சுடரொளி பரப்பும் வேலுடன் அவன் குதிரையின்மீது வீற்றிருக்கும் தோற்றம் பார்த்தவர்களுடைய கண்னேயும் கருத்தையும் கவர்கின்றது: ஈர்க்கின்றது. § அவன் உலா வருவதைத் தெருவின் இருபுறங்களிலும் உள்ள வீடுகளின் சாளரங்களின் வழியாகப் பருவமங்கையர் காண்கின்றனர், சாரளங்களில் மெல்லி வலைகள் பின்னப்பெற்றுள்ளன. குதிரையோ விரைந்து கடைபோட்டுச் செல்லுகின்றது. உலாக் காட்சியைக் காணும் அம் மங்கையர் உள்ளத்தில் ஒருவித கொந்தளிப்பு ஏற்படு கின்றது. சிலர் காதல் கோக்குடன் அவனேக் காண்கின்றனர். சிலர் அவனே மயக்கத்துடன் வெறித்துப் பார்க்கின்றனர். சிலர் கடைக் கண்ணுல் நோக்குகின்றனர். சிலர் அவனே விழுங்கிவிடுவதுபோல் உற்று கோக்குகின்றனர். சிலர் அவனுடைய அழகில் ஈடுபட்டு இப் படியும் அப்படியுமாகத் தத்தளித்துத் தடுமாறிப் பார்க்கின்றனர். இங்ங்ணம் அவனைப் பார்க்கும் மகளிரின் கண்கள் பல்வேறு விதமாகப் பிறழ்ந்து பிறழ்ந்து கோக்குகின்றன. ஆனால், வளவன் அவர்களை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அவன் கம்பீரமாகப் போய்க் கொண்டே இருக்கின்ருன். வழியில் செல்வோர் அவன் செல்லும் நெறியையும் கங்கையர் பல்வேறு விதமாக அவனே நோக்குவதையும் காண்கின்றனர். 'தொடர்ந்து வளவனேயே நோக்கி கிற்கும் இவ் வனிதையரின் கண்கள் செம்படவர்களின் நீலவலேயில் அகப்பட்ட கெண்டை மீன்கள் பிறழும் தோற்றத்தையல்லவா ஒத்திருக் கின்றது?’ என்று பேசிச் செல்லுகின்றனர். சாளரத்திலும் கெண்டைகள் உள்ளனவே ' என்று வியப்படைகின்றனர்.