பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i 70 முத்தொள்ளாயிர விளக்கம் இது கைக்கிளை தலைவி தோழியிடம் சொல்வது. விளக்கம் : கனவினுள் காண்கொடா கண்ணும் - சொப்பனத்தில் கண் மூடியிருப்பதால் காதலனைக் காணமுடியவில்லை. கலந்த கனவினுள் . வாய்ப்பாக விழிப்பில் நேராக வந்தபொழுது. முன் விலக்கும் காணும் , நானம் முன்பதாக வந்து முகத்தைத் திருப்பிவிடுகின்றது. இனவங்கம் - கூட்டம் கூட்டமாகச் செல்லும் மரக்கலங்கள். ஒதம் - அலைகளே. போழும் . இதுத்தோடும். புகாஅர்ப் பெருமாளுர் புகார் நகரத்து அரசனது. செங் கோல் வடுப்படுப்பச் சென்று - நீதி முறைமைக்கு மாருகப்போய். சோழன் ஏதோ செங்கோலாட்சிதான் நடத்துகின்ருன். அந்த ஆட்சியில் இந்தக் கண்ணும் நாணமும் தகாத செயல்களை கடத்தித் தான் வருகின்றன ! - (17)