பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[76] எங்ங்ணம் காவலன்? iெழக்கம்போல் வளவன் உலா வருகின்ருன்; வனப்புடைய வணிதை யொருத்தி அவனைக் காண்கின்ருள் அவன்பால் மால் கொண்டு மனம் உருகுகின்ருள். அவனையே நினைந்து கினைந்து ஏங்குகின்ருள். இங்கிலயில் கோவலர் ஊதும் குழலோசை அவளது செவியில் விழுகின்றது. மாலை நேரம் வந்ததைக் காட்டும் அடை யாளங்களுள் இடைச் சிறுவர்கள் ஊதும் புல்லாங்குழல் ஓசையும் ஒன்று. அஃது அவளது காதலுணர்ச்சியைக் கொழுந்துவிட்டெரியச் செய்கின்றது. பிரிந்தாரை வருத்துவதும் சேர்ந்தாரைக் களிப்பிப் பதும் அல்லவா இசையின் செயல் ? இதனை நன்கு உணர்ந்துதான் வள்ளுவப் பெருக்தகையும், அழல்போலும் மாலைக்குத் துதாகி ஆயன் குழல்போலும் கொல்லும் படை. : என்று அதன் வலிமையை எடுத்துரைத்துள்ளார். ஆதலால் அவ் வோசை அவளுக்கு அளவற்ற துன்பத்தை விளைவிக்கின்றது. அதனுல் மிகவும் வாடுகின்ருள். வாடிய கிலேயில் தனக்குள்ளேயே இவ்வாறு குறைபட்டுக்கொள்ளுகின்ருள் : ' கெஞ்சமே, தெளிவான தடாகத்தில் பூத்த நறுமலர் மாலை யணிந்த சென்னி என்னும் இளவளவனை மண்ணுலகக் காவலன் என்று மக்கள் யாவரும் மார்தட்டிப் புகழ்கின்றனரே. உண்மையாக அவன் மண்ணுலகினைக் காப்பவனுக இருந்தால், அவன் என்னிடம் வந்து இக்குழலோசை எனக்குத் துன்பம் தராதவாறு காக்க வேண்டும். அல்லது குழலூதாது கோவலரையாவது தடுத்திருக்க வேண்டும். ஒன்றையும் செய்கின்ருனில்லையே. இத்தகைய கொடிய வன யல்லவா உலகம் காவலன் என்று கதறுகின்றது : பார்த்திபன் என்று பள்ளு பாடுகின்றது. இஃது என்ன அறியாமை " என் கின்ருள். க குறள்-122.8