பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[80] நாரையுடன் தங்கை திமிழ் இலக்கியங்களில் காதற் கவிதைகட்குக் குறைவில்லை. காதல் உணர்ச்சியை மேம்போக்காக எடுத்துரைத்தால், அது சிறந்த காதற் கவிதை யாகாது. மேனுட்டுக் கவிதைகளில் பெரும்பா லானவை இந்த வகையைச் சேர்ந்தவை. பெருங் கவிஞர்கள் காதல் காரணமாக எழுந்த ஒரு வெறியைக் கண்டு வியப்பெய்தி அந்த வெறியிலிருந்தே கவிதையை மலரச் செய்வர். இலக்கியங்களில் காதல் உணர்ச்சியை அனுபவிப்பதற்கு உள்ளத் தூய்மை வேண்டும்; நமது மனத்தில் தேங்கிக் கிடக்கும் கேவலமான காம வெறியாகிய சிந்தனையுடன் இத்தகைய பாடல்களைச் சுவைக்கப் புகுவது அவற்றை இகழ்வதோடொக்கும். 烹 蕊 烹调 உறையூருக்கு வடபால் சிறிது தூரத்தில் அமைந்துள்ள சிற்றுார் ஒன்றிலுள்ள கங்கை யொருத்தி சோழன்பால் மனத்தைப் பறிகொடுக்கின்ருள். அவன்பால் கொண்ட காதல் கரை கடந்து பெருகுகின்றது. ஒரு நாள் தன் ஊரிலுள்ள குளத்திற்கு நீராடப் போகின்ருள் அங்கங்கை. அப்பொழுது வடதிசையிலிருந்து பறந்து வந்த நாரை யொன்று குளத்திலிறங்குகின்றது. அது சிறிது நேரத்தில் தெற்கேயுள்ள உறந்தைமாநகருக்குச் செல்லக்கூடும் என்று எண்ணுகின்ருள் அங் கங்கை. யார் மூலமாவது தூது போக்க வேண்டும் என்று கினைத்திருந்த அவளுக்கு காரை வந்தது நல்லதாய்ப் போயிற்று. தன் குறையை அதன்மூலம் சொல்லியனுப்ப கினைக் கின்ருள். காதல்வெறி அவளே இவ்வாறு பேசச் செய்கின்றது: 'சிவந்த கால்களையுடைய இள நாரையே, உன் கால்மேல் என் கைகளை வைத்து வணங்கிக் கேட்டுக் கொள்ளுகின்றேன். நீ தென்பால் உள்ள உறையூருக்குப் போனல், சோழனிடத்து யான் உற்ற நோயைச் சொல்லி வருவாயா? அங்குச் சென்ருல் காவிரிக்

  • பாரதியின் கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, ஆழ்வாதிகள், காயன்மார் களின் பக்திப் பாடல்கள் இவ்வகையைச் சார்ந்தலை, -