பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£823 3 நான் சொன்னதைக் கேட்டால்தானே? இக்கால வழக்கப்படி மன்னன் சில சமயம் தெரு வழியாக உலா வருவது வழக்கம். மன்னனைக் கானும் மக்கள் மழையைக் கண்ட பயிர்கள் போலவும், தாய்முகம் காணும் குழந்தைகள் போலவும் மகிழ்ச்சி அடைவர். இந்த முறையில் சோழன் ஒரு நாள் உலா வரு கின்ருன். அவன் அணிந்துள்ள ஆத்திமாலே இப்படியும் அப்படியு மாக அசைந்து கவர்ச்சியினைத் தருகின்றது. அவனுடைய தோள் களோ மாற்ருரையெல்லாம் கொன்று வெற்றிப்பொலிவுடன் திகழ் கின்றன. இத்தகைய தோற்றத்துடன் அவன் பரியின்மீது ஏறி வருகின்ருன். நகர் மக்கள் யாவரும் தத்தம் வீட்டைவிட்டு வெளியே வந்து அவனைக் கண்டு களித்து வணக்கம் செலுத்துகின்றனர். பருவப் பெண் ஒருத்தி வளவனக் காணச் செல்லுகின்ருள். அவளுடைய செவிலித்தாய், ' எங்கே போகின்ருய்? வீட்டுக்குள் செல்!” என்று குறுக்கிட்டுத் தடுத்தும் அதற்குச் சிறிதும் செவி சாய்க்காமல் கூட்டத்துடன் சென்று வளவனைக் காண்கின்ருள். அவனது தோற்றப் பொலிவு இவளது கெஞ்சத்தைக் கவர்கின்றது; அவன்மீது கழிபெருங் காதல் கொள்ளுகின்ருள். அன்றுமுதல் அவள் சரியாக உண்பதும் இல்லை; உறங்குவதும் இல்லை. உடல் வாடிவிடுகின்றது; உடலின்மீது பசலையும் படர்கின்றது. எழிலும் எங்கோ சென்று மறைந்துவிடுகின்றது. இந்த கிலேயைக் கண்ட செவிலி இவ்வாறு தன் நெஞ்சொடு சொல்லிச் சலிப்படைகின்ருள்: நெஞ்சமே, அப்பொழுதே நான் எவ்வளவோ சொல்லித் தடுத்துப் பார்த்தேன் ; சோழனேப் பார்க்கக்கூடாது என்று சொன் னேன். கேட்டாளா அவள்? இப்பொழுது வேதனைப்படுகின்ருள். உடல் வாடிப்போய்விட்டது. மேனியெல்லாம் பீர்க்கம்பூ நிறத்தில் பசலை பூத்துவிட்டது. அப்பொழுது என் சொல் நீர்மேல் திரியிட்டுப் பற்றச் செய்கின்ற நெருப்பின் தன்மையைப்போல் பயனற்றுப்