பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Î 84 ஊசலாகும் உள்ளம் சில மாதங்களாகக் கிள்ளி வழக்கம்போல் உலா வருவதில்லை. அவனைக் காணப்பெருமல் மக்கள் ஏங்குகின்றனர். அவன் தோள் களைக் காணும் நாள் எக்காளோ? வெண்கொற்றக் குடையின்கீழ் உயர்தனிச் செங்கோலோச்சும் உத்தமனக் காணும் பேறு நம் கண் களுக்கு என்று கிடைக்குமோ?"...என்றெல்லாம் எண்ணுகின்றனர். பெரும்பாலான மக்கள் அவனது தோள் அழகினைப்பற்றியே அதிக மாகப் பேசிக்கொண்டிருக்கின்றனர். கங்கை யொருத்தி இதனைக் கேட்டுக் கிள்ளியின்மீது காதலுறுகின்ருள். அந்தக் கிள்ளியின் தோள் களைப் பார்க்கவேண்டுமென்று அவளுடைய மனம் ஏங்கிக்கொண் டிருக்கும்பொழுது சோழனது உலா அறிவிக்கப்பெறுகின்றது. மக்கள் தெருவிலும் அவரவர்கள் வீட்டு வாயில்களிலும் திரள் திரளாகக் கூடுகின்றனர். அரசன் ஒவ்வொரு தெருவாகச் சென்று அரண் மனக்குப்போவதற்குள் நள்ளிரவு ஆகிவிடும். இந்த கங்கை இருக்கும் வீட்டருகில் வருங்கால் யாமம் வரப்போகின்றது. பார்க்கத் துடித்துக்கொண்டிருக்கும் நங்கை வீட்டின் வெளியே வந்து அவனைக் காணவேண்டுமென்று கினைக்கின்ருள். வாயிற் கதவு வரையில் அவள் மனம் வருகின்றது. நாணம் அதற்குமேல் போகவொட்டாமல் தடுத்து கிறுத்துகின்றது. மீண்டும் மனம் உள்ளே சென்றுவிடுகின்றது. ஆயினும், சோழன்பால் வைத்த காதல் மனத்தை கெகிழ்விக்கின்றது; மீட்டும் அது கதவு வரையில் வருகின்றது. இங்ங்ணம் அவளுடைய மனம் போவதும் வருவதுமாக அலைகின்றது; இரண்டு பக்கங்களிலும் நெருப்பு பற்றப்பெற்ற மூங்கிற் குழாயினுள் அகப்பட்ட எறும்பு இங்குமங்குமாக அலைந்து திண்டாடுவதுபோல அவளது மனமும் திண்டாடுகின்றது : இங்கு மங்குமாக ஊசலாடுகின்றது. தலைவி தனது கிலேயைத் தன் நெஞ்சுடன் சொல்வதுபோல் கவிஞர் புனைந்த சொல்லோவியம் இது :