பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[851. கண்ணுேட்டம் வேண்டாமா? சிசிதாரணமாகக் காதலைப்பற்றிய செய்திகளை அறிவித்தற்குத் தலைவிக்குச் சிறந்த கருவியாயிருப்பவள் தோழி, சில சமயம் காதல் மீதுர்ந்து கிற்கும்பொழுது தலைவியின் நெஞ்சமே தலைவனிடம் செய்திகளை அறிவிப்பதாகப் பாவனை செய்துகொள்ளுதலும் உண்டு. இது தன்மை கவிற்சியே. காதல் மயக்கத்தில் தலைவியின் மனம் காதலனிடம் சென்று அவனுடன் ஒன்றி நிற்பது உண்மையல்லவா? மனம் தோழிபோலவே ஒரு தனியான தத்துவமாகக் கருதப்பெறு கின்றது. காரை, அன்னம், கிளி, தென்றல் போன்றவைகளும் செய்திகளைக் கொண்டுசெல்வதாகத் தலைவி கருதுதல் - காதல் வெறியினுல்தான். 烹 驾 繁 சோழன் உலா வருங்கால் அவனைக் கண்ட கங்கை பொருத்தி அவன்மீது மையல்கொண்டு விடுகின்ருள். உலாவின்பொழுது பார்த்த புலிக்கொடி அவளது மனத்தைவிட்டு நீங்கவில்லை. சதா அவனேயே கினைத்துக்கொண்டே இருக்கின்ருள் அவள்; அவனுடைய புனல் காடும் அவளது கினேவிலிருக்கின்றது. உணவும் அவள் சரியாக உண்பதில்லே உறக்கமும் கொள்வதில்லை. இதனுல் உடல் மெலிகின்றது; தோளும் மார்பும் மெலிவடைகின்றன. உடலெங்கும் பசலே படர்கின்றது. காதல் வெறியால் அவள் தன் மனத்தையே துதாக அனுப்பு கினைத்து அதனிடம் இவ்வாறு பேசுகின்ருள் : 'நெஞ்சமே, உனக்கு அதிக வலிமை உண்டு , அதனை நான் நன்கு அறிவேன். எனினும், உன்னத் திடப்படுத்திக்கொள்வாயாக. காதலன் உன்னே நெருங்கி வருங்கால், நானும்படியாக நேரிட் டாலும் நேரிடலாம். அங்ங்ணம் காணுவதற்கு இடங்கொடுக்கதே. ஒளிபொருந்திய புலிக் கொடியையுடைய சோழன் வருங்கால் அவ னுக்கு வணக்கம் செலுத்துவாயாக. பிறகு துணிந்து பேசுக, உன்னுடைய தோள், மார்பு இவை முன்னிருந்த நிலையையும் இப் பொழுதிருக்கும்:கிலையையும் எடுத்துக் கூறுக அரசர்கட்கு உள்ள கண் மரக்கண்ணு? சிறிதேனும் இரக்கம் வேண்டாமா?’ என்று 浚 சொல்லி இரந்து கேள் தொழுது கேள். என்கின்றுள்.