பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடையுடன் வாது titய்ந்து செல்லும் பரிகள் பூட்டிய தேரேறி கிள்ளி உலா வரு கின்ருன் யானைகளும் அவனைச் சூழ்ந்து வருகின்றன. ஊரில் ஒரே பரபரப்பு ; உலாவினைக் காண ஊர் மக்கள் ஆங்காங்குத் திரளு கின்றனர். வீட்டு வாயிலில் கின்றுகொண்டு கங்கை யொருத்தி உலாக் காட்சியைக் காண்கின்ருள். கிள்ளி தேரின்மீது வீற்றிருந்த பெருமிதத் தோற்றமும்,அவனைச் சூழகின்ற யானைகளின் கம்பீர நடை யும் அவளது உள்ளத்தை ஈர்த்துவிடுகின்றன. அன்று முதல் அவள் அரசன்மீது மையல்கொண்டு மயங்குகின்ருள். ஊணும் உறக்கமு மின்றி உள் வீட்டிலிருந்துகொண்டிருக்கின்ருள். போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு எதை எதையோ எண்ணியவாறு படுத்துக் கிடக்கின்ருள். பின்வாயிற் கதவுகளும் சாளரக் கதவுகளும் சரியாகப் பொருத்தி வைக்கப்பெறவில்லை. அது கூதிர்க் காலம். வாடைக்காற்று ஒ' வென்ற இரைச்ச லுடன் திடீரென்று பின்வாயிற் கதவுகளின்மீது மோதுகின்றது. வேறு உலகில் உலவிக்கொண்டிருந்த அவளது உள்ளம் திடுக்கிடுகின்றது. பிறகு கதவைத் தள்ளித் திறந்தது வாடைக் காற்று என்பதை அறி கின்ருள். வாடையை கட்டாக்கிக்கொண்டு அதனுடன் இவ்வாறு பேசுகின்ருள் : ' குளிர்ந்த பணி நிறைந்த வாடையே, யோ, வா ; நான் ஏதோ பேய்தான் இவ்வளவு வேகமாகக் கதவைத் திறக்கின்றது என கினைத்தேன். ஓகோ ! இப்பொழுது புரிகின்றது, செய்தி. கிள்ளியை யான் கண்டேன் அல்லவா? திறைப்பொருளே வாங்கிவரும்படி உன்னே ஏவினுளு ? பெண்ணுகப் பிறந்தவர்கள்தாமா உனக்கு வரி செலுத்தும் குடிகள் ? உன் செயல் நன்ருக இருக்கின்றது யானப் படைகளையும் தேர்ப் படைகளையும் உடைய கிள்ளியை கான் அறி வேன்; அவன் எனக்கு அருள் செய்வான் அவனிடம் பேசிக்கொள் 13