பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[109] காதல் நெருப்பு அவள் சிறு குழந்தையாக இருந்தபொழுது மிகத் துடுக்காக இருப்பாள். துருதுரு வென்று இங்கு ஓடுவாள் அங்கு ஒடுவாள். கண்ட பொருள்களேயெல்லாம் வாங்கித் தரும்படி ஓயாது தொல்ஜல் தருவாள். எதற்கெடுத்தாலும் சண்டித்தனம் செய்வாள். ஆளுல், பெற்ருேக்கள் மட்டுமின்றி அக்கம்பக்கத்திலுள்ளாரும் அவளுடைய கூர்த்தமதியைக் கண்டு அவளிடம் அளவற்ற அன்பும் பரிவும் காட்டிவந்தனர். அவள் ஏதாவது ஓர் ஏக்கம் பற்றி மனம் நொந்து அழுதுகொண்டிருந்தால், அக்கம்பக்கத்திலுள்ள யாராவது ஒருவர் அவளைத் தோளில் துக்கிக்கொண்டு கடைத்தெருவில் பல இடங் கட்குச் சென்று ராக்குக் காட்டுவர்; பொம்மைகள் வாங்கித்தருவர். கோயிலுக்குத் தூக்கிச் சென்று சுவாமியைக் காட்டுவர். ஆற் நிற்கோ குளத்திற்கோ துக்கிச்சென்று பலவிதமான வேடிக்கை களைக் காட்டுவர். தாம் குளித்த பிறகு அவளேயும் குளிப்பாட்டுவர். இவையெல்லாம் அவளது அறியாப் பருவத்தில் நிகழ்ந்தவையாகும். இங்ங்ணம் அவள்பால் பரிவும் ஊக்கமும் காட்டிய ஊரார் அவள் பருவமடைந்து திருமண வாழ்க்கையில் புகும் கிலேயிலும் அவளிடம் ஆர்வமும் அக்கறையும் காட்டுவது இயல்பு. இதை எவரும் எதிர்பார்ப்பர். அந்தப் பெண்ணும் இதனை எதிர்பார்ப்பது இயல்புதானே ! 翼 富 演 அவள் பருவப் பெண்ணுக இருக்கும்பொழுது மாலே நேரத்தில் உலாவரும் சேரனப் பார்க்கின்ருள். அவனேயே திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று துடிதுடிக்கின்ருள். அவளது காதல், வெறி யாக மாறிவிடுகின்றது. அவனே எப்படியாவது அடையவேண்டும், அணையவேண்டும் என்று அவளது கெஞ்சு அழன்று கொதிக்கின் றது. என்னசெய்வது? தானுகச் சாதித்துக்கொள்ளக்கூடிய செயலா இது ? இந்த கிலேயில் அவள் தனியாக ஓரிடத்தில் அமர்ந்துகொண்டு என்னவெல்லாமோ சிந்திக்கின்ருள். அந்த இடத்தில் யாரும் இல்லை. தன்னைப் பாராட்டிவந்த ஊராரை நினைக்கின்ருள் அவர்கள்