பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊர்வாயை மூட முடியுமா! 225 இங்கிலேயில் பிறிதொருகாள் சேரன் உலா வருகின்ருன் நங்கையோ ஊரார் பழிமொழியையோ (scanda1 அன்னையின் அலைத்தலையோ பொருட்படுத்தவில்லை. ஊரவர் கெளவை எருவாக அன்னை சொல், நீராக அவளது காதல் நோய் செழித்து வளர் கின்றது. ஆகவே,சேரனேக் கண்டு மகிழவேண்டும் என்ற துடிப்புடன் வாயில் நோக்கி வருகின்ருள். இதனைக் காணும் அன்னை ஓடோடியும் வந்து அவளை வீட்டுக்குள் தள்ளிக் கதவையும் அடைத்துத் தாழிட்டு விடுகின்ருள். கல் நெஞ்சமுடைய அன்னை ' என்று எண்ணிய கிலையில் அமர்ந்திருந்த அவளிடம் தோழி வருகின்ருள். அவளிடம் கடந்தவற்றை ஒன்றுவிடாமல் சொல்லித் தன் ஆத்திரத்தையும் சேர்த்துக் கொட்டுகின்ருள் அங்கங்கை : " தோழி, கடலைப் போன்ற மிகுந்த சேனைகளையுடைய சேரனே இன்று பார்க்கமுடியாதபடி வெளிவாயிலிலுள்ள ஒரே கதவையும் அடைத்துவிட்டாள் என் அன்ன. இது வீணுன செயல் என்பதைப், பாவம், அவள் அறியவில்லை கதவைத் தாழிட்டுவிட்டாள் என்ருல் காதல் காற்றிலா பறந்துவிடும்? அந்த மன்னன் பெயரையும் என் பெயரையும் இணைத்துப் பேசும் மகளிரின் வாயும் இதனால் அடை பட்டாவிடும்? அல்லது ஆரவாரம் செய்யும் அணங்குகளின் வாயை இவளே சென்று அடைத்துவிடத்தான் முடியுமா? என்னே இவளது அறியாமை ' என்று ஏக்கத்தோடும் புன்னகையோடும் கூறு கின்ருள். இந்தக் காட்சியைக் காட்டும் கவிஞரின் சொல்லோவியம் இது : கடற்ருனேக் கோதையைக் காண்கொடாள் வீணி லடைத்தா டணிக்கதவ மன்ன-யடைக்குமேல் ஆயிழையா யென்னை யவன்மே லெடுத்துரைப்பார் வாயு மடைக்குமோ தான்.

பா வே.) 3. காண் கொட்டாள். * குறள் 147.

$ 5