பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[102] இவர்கட்கு எப்படித் தெரிந்தது : - ്ധpതഃഖങ് சிறந்த சேர நாட்டின் மாக்தை நகரம் தனிச் சிறப்பு வாய்ந்தது. அங்கு கீர்வளத்திற்குக் குறைவில்லை ஊரைச் சுற்றிலும் புன்னைமரங்கள் செறிந்து காணப்பெறுகின்றன . தென்ன மரங்கள் நாற்புறமும் சூழ்ந்து நகரை அணிசெய்கின்றன. தோழிமாருடன் நீராடச் சென்ற கங்கையொருத்தி இந்த இயற்கைக் காட்சிகளை அனுபவித்துக்கொண்டே செல்லுகின்ருள். இந்த இயற்கை வளத்தைப்பற்றி உரையாடிச் செல்லும்போது தோழி யொருத்தி சேரநாட்டில் சுரபுன்னை மரங்கள் அதிகமாக உள்ளன என்றும், எங்குச் சென்ருலும் அந்த மலர்களின் மணத்தை நுகரலாம் என்றும் தான் கேள்வியுற்றவற்றைக் கூறுகின்ருள். இவர்கள் இங்கனம் உரையாடிக்கொண்டு தடாகக் கரையில் கின்றிருந்தபொழுது மாந்தை நகரைப் பார்வையிட வந்த சேரன் அதே தடாகத்திற்கு நீராட வருகின்ருன். கங்கை அவனே நோக்கு கின்ருள். சேரனுடைய கம்பீரமான தோற்றம் அவளது உள்ளத்தைக் கொள்ளை கொள்ளுகின்றது; காதலுணர்ச்சி அவளை ஆட்கொண்டு விடுகின்றது. மகளிர் அனைவரும் நீராடி வீடு திரும்புகின்றனர். அன்றிரவு அவளுக்கு உறக்கமே வரவில்லை. எப்படி வரும் : புன்னையஞ் சோலேயின் அழகு, புனல் வளம், தென்னஞ்சோலையின் செழிப்பு, சேரனுடைய கம்பீரமான தோற்றப்பொலிவு - இவை யாவும் அவளது மனத்தைவிட்டு அகலவில்லை. தோழிகறிய சுரபுன்னே மலர்களின் மணமும் அவளது கினேவிற்கு வருகின்றது. இவற்றையே கினைந்து கினைந்து உருகுகின்ருள். இரவில் நீண்டநேரம் உறங்காது படுக்கையில் புரண்டு கொண்டிருக்கின்ருள். இங்கிலையில் எப்படியோ சிறிது அவள் கண்ணயர்கின்ருள். உடனே கனவும் வந்துறுகின்றது. அதில் சேரன் வருகின்ருன் மெது வாக அவளுடைய உடலைத் தடவுகின்றன். துடித்தெழுகின்ருள் கங்கை, கனவு கலந்துவிடுகின்றது; கினேவும் வருகின்றது. அதற்குப்