பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 முத்தொள்ளாயிர விளக்கம் பிறகு அவள் துரங்கவே இல்லை. இந்த கிலேயை அவள் யாரிடமும் சொல்லவில்லை. ஆயினும், இவள் மெலிவு, சோர்வு, உறக்கமின்மை, உணவு உண்ணுமை முதலியவற்றைத் தோழியர் எப்படியோ அறிந்து கொள்ளுகின்றனர். சிலநாட்கள் கழிகின்றன. ஒருநாள் தோழியர் அவளை நோக்கி, ‘அன்று இரவு எப்படி இருந்தது?" என்று வினவு கின்றனர். நங்கை அவர்களின் வினவிற்குப் பதிலிறுக்காமல் அதைப் பலவிதமாக மறைக்க முயலுகின்ருள். "நீ சொல்லா விட்டால் எங்கட்குத் தெரியாதா என்ன?’ என்று ஏளனச் சிரிப்புக் காட்டுகின்றனர் தோழியர். நங்கை அந்தக் கனவு நிகழ்ச்சியை நினைந்து பார்க்கின்ருள். 'கனவில் கண்டதை இவர்கள் எப்படி அறிந்தனர்?' என்ற சிந்தனை யுடன் அவர்கள் முகத்தை நோக்குகின்ருள் அக்காரிகை, நங்கையின் இந்த நிலையைக் கவிஞர் அழகான சொல்லோவி யத்தால் நமக்குக் காட்டுகின்ருர், அது இது: புன்னுகச் சேலே புனற்றெங்கு சூழ்மாத்தை நன்னுக நின்றலரு நன்னுடன்-என்னுகங் கங்கு லொருநாட் கனவினுட் டைவந்தான் வன்கொ லிவரறிந்து வாறு. . இது கைக்கிளை; கங்கை நெஞ்சொடு நவில்வது, விளக்கம் : புன்னுகச் சோலை - புன்னை மரங்கள் செறிந்த சோலை, புனல் தெங்கு - புனல் வளமும் தென்னைமரங்களும்; இவை சூழ்ந்தது மாந்தை ககரம். கல் நாகம் - நல்ல சுரபுன்னை ; இது மணத்திற் சிறந்த மலர்களைத் தரும். சோ காட்டில் இம் மரங்கள் அதிகம். அலரும் மலரும். ஆகம் - மேனி ; உடம்பு. கங்குல் ஒரு நாள் - ஒரு நாள் இரவில், கனவினுள் தை வந்தான் - கனவில் வந்து தடவிக்கொடுத்தான். என் கொல் இவர் அறிந்த ஆறு - இதைச் சேடியர் எங்ங்ணம் அறிந்தனர். இயற்கைவளம் செறிந்த மாந்தை நகரைச் சேரன் தனக்கு உரிமையாக வைத்திருத்தல் போல, சிறந்த மன்னர்குல மங்கையரை மணந்த மன்னன் எழில்நலம் கிறைந்த தன்னையும் உரிமை மகளிருள் ஒருத்தியாகக் கொண்டு கனவில் வந்து தன்னைத் தழுவிச் சென்றதாக கங்கையின் மயக்கம். “. ..., (15)