பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[108 மனம் அறியா மன்னன் பிரிந்தை நகரத்துப் பூந்தோட்டம் ஒன்றில் கங்கையொருத்தி நறுமலர் கொய்துகொண்டிருக்கின்ருள் அந்தத் தோட்டத்தின் அருகிலுள்ள சாலை வழியாகச் சேரன் குதிரைமீது செல்லுகின்றன். அரசனே இவள் பார்க்கின்ருள் அரசனும் இவளேப் பொது நோக்காகக் காண்கின்ருன். ஆனல், நங்கை அரசனது பார்வை பைச் சிறப்பு நோக்காகக் கொண்டு எப்படியும் மன்னன் தன்ன மணப்பான் என்று பகற்கனவு காண்கின்ருள். சிறிதுநேரங் கழித்து அவளும் தோட்டத்தில் மற்ருெரு பக்கத்தில் பூக்கொய்துகொண்டிருந்த தோழியும் அங்குள்ள தடா கத்தில் நீராடி வீட்டிற்குத் திரும்புகின்றனர். கங்கையின் நினை வெல்லாம் சேரன்பாலிருக்கின்றது. எப்படியாவது நடந்த நிகழ்ச்சி வைத் தோழியிடம் சொல்லிவிடவேண்டும் என்று நினைக்கின்ளுள் கங்கை, ஒருவிதமாகப் பேச்சைத் தொடங்குகின்ருள் : 'தோழியே, இந்த நகரத்து மன்னன் மிகமிகத் திறமையுடன் ஆட்சி செய்கின்ருளும், அவன் எல்லோருடைய எண்ணத்தையும் குறிப்பினலேயே அறிந்துகொள்வாளும், ஆளுல் எனக்குத் தெரிந்த மட்டிலும் அவ்வளவு கூர்த்த மதிபடைத்தவன் என்று சொல்ல இயலவில்லை. அங்ஙனம் கூரிய அறிவுடையவனுயின், என் கோக்கினைக் கொண்டே என் உள்ளத்தை அறிந்துகொண்டிருந் திருப்பான். ஆனல் நமது குறையை காம் சொல்லித்தான் தீர்த்துக் கொள்ள வேண்டும்போலிருக்கின்றது. ” இந்த அளவு அவள் சொன்னவுடன் காணம் மேலும் பேசவிடாது அவளைத் தடுக்கின்றது. சிறிதுநேரம் அவள் பேசாதிருக்கின்ருள். காணத்தின் காரணமாகப் பேச்சை வேறுவழியாகத் திருப்பப் பார்க் கின்ருள் : "தோழி, இன்று உனது நெற்றிப்பொட்டு நல்லமுறையில் வாய்ப்பாக அமைந்து இருக்கின்றது. அது கெற்றிக்குத் தனி