பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 முத்தொள்ளாயிர விளக்கம் அழகினைத் தருகின்றது" என்று சொல்லி மேலும் சிறிதுநேரம் மெளனம் சாதிக்கின்ருள். அதன் பிறகு, “உயர்ந்தவரின் உள்ளத்தை நமது உள்ளத்துடன் பொருத்திப் பார்க்கவேண்டுமானல் அவர்களது இயல்பை நாம் அறிந்துகொள்ளவேண்டும்' என்கின்ருள். இவ்வாறு தலையைச்சுற்றி மூக்கைப் பிடிப்பதுபோலத் தன் உள்ளக்கிடக்கை யைத்தோழிக்கு உணர்த்துகின்ருள் அந்த கங்கை, இந்தக் காட்சியை மக்குக் காட்டும் கவிஞரது சொல் லோவியம் இது : மல்லனீர் மாந்தையார் மாக்கடுங்கோக் காயினுஞ் சொல்லவே வேண்டும் நமகுறை-நல்ல திலகங் கிடந்த திருதுதலா பஃதால் உலகங் கிடந்த இயல்பு. இது கைக்கிளை தலைவி தோழிக்கு உரைப்பது, விளக்கம்: மல்லல் நீர் மாந்தையார் - நீர்வளம் மிக்க மாந்தை ககரி லுள்ள குடிமக்களது. மாக்கடுங்கோக்கு ஆயினும் அரசனகிய சேரற்கு ஆலுைம், மே குறை நமது குறையாகிய காதலே. திலகம் , நெற்றிப் பொட்டு, துதல் நெற்றி. அ.தால் - இதில் ஆல் ' என்பது அசை, கன்று முட்டினுல்தான் பசு பால் கொடுக்கும் என்பது யாவரும் அறிந்த உண்மை. அங்ங்ணமிருக்க, குறையிரக்காமல் கோமான் குறை நீக்குவான் என்பது குவலயத்தில் குதிரைக் கொம்பு என்பது கங்கையின் குறிப்பு. (12)