பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு - 1 முத்தொள்ளாயிரப் பதிப்புக்கள் உயர்திரு. ரா. இராக வ ய் யங் கார் அவர்கள் (முன்னுள் அண்ணுமலை பல்கலைக் கழகத் தமிழ்ப் பேராசிரியர்) பதிப்பித்த முத்தொள்ளாயிர மூலம்; இது மதுரைத் தமிழ்ச் சங்க வெளியீடாக வெளிவந்தது (1905). முப்பது ஆண்டுகள் கழித்து மேற்படி மதுரைத் தமிழ்ச் சங்க வெளியீடாகவே வெளிவந்த இரண்டாவது பதிப்பு-மூலம் மட்டிலும் (1935). பேராசிரியர் 5. வையாபுரிப் பிள்ளை அவர்கள் (முன்னுள் சென்னை தமிழாராய்ச்சித் துறைத் தலைவர்) பதிப்பித்த புறத்திரட்டு என்ற நூலின் மூலம், இதில் முத்தொள்ளாயிரப் பாடல்கள் பல தலைப்புக் களில் அமைந்து கிடக்கின்றன. இதன் முதற்பதிப்பு 1938-ஆம் ஆண்டிலும், இரண்டாம் பதிப்பு 1939-ஆம் ஆண்டிலும் சென்னைப் பல்கலைக்கழக வெளியீடாக வெளி வந்துள்ளன. ரசிகமணி டி. கே. சிதம்பரநாத முதலியார் அவர்கள் பதிப்பித்த முத்தொள்ளாயிரம் (திருக்குற்ருலம், பொதிகை மலைப்பதிப்பு) ; இதன் முதற் பதிப்பு 1943-ஆம் ஆண்டிலும், இரண்டாவது பதிப்பு 1948-ஆம் ஆண்டிலும், மூன்ரும் பதிப்பு 1957-ஆம் ஆண்டிலும் வெளி வந்துள்ளன. - திருவாளர் ந. சேது ரகுநாதன் அவர்கள் உரையுடன் பதிப்பித் துள்ள முத்தொள்ளாயிரம் 1946-இல் முதற்பதிப்பும், 1952-இல் இரண்டாவது பதிப்பும் திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடாக வெளிவந்துள்ளன. காரைக்குடி ரெ. முத்துக் கணேசன் அவர்கள் பதிப்பித்து வெளி யிட்ட முத்தொள்ளாயிரம் (1957). இதன் இரண்டாவது பதிப்பும் (1962) வெளி வந்துள்ளது.