பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 முத்தொள்ளாயிர விளக்கம் அல்லவா ? இந்த உலகில் உத்திராடம், திருவோணம் போன்ற நாட்களில் பிறந்தவர்களை முறையே உத்திராடத்தான் திரு வோணத்தான் என்று கூறுவது மரபுதான். ஆயின், ஆதிரையில் பிறவாதானே ஆதிரையான் என்று கூறுவது எங்ங்ணம் பொருங் தும் ஒரு நாமம் ஒருருவம் இல்லாத இறைவனே இந்தப் பைத்தியக் கார உலகம் ஆயிரம் நாமங்களையும் திருவுருவங்களையும் கற்பித்து அல்லவா வழிபடுகின்றது? " இது பலவீடுகளைக் கட்டிய சீமானக் கோடி வீட்டுச் சீமான் என்று சொல்வதைப் போலல்லவா இருக் கின்றது? " என்று கருதுகின்ருர் கவிஞர். இந்த நிலையில் அவர் வானத்தை ஏறிட்டுப் பார்க்க நேரிடு கின்றது. கண்ணேப் பறிக்கும் எண்ணிறந்த சுடர்கள் விண்ணில் ஒளிர்ந்துகொண்டிருக்கின்றன. எங்களையெல்லாம் இறைவனே படைத்தான் ' என்று அவரிடம் முறையிடுவனபோன்றிருக்கின்றன அவைகள். ஒரே வியப்பில் மூழ்கிவிடுகின்ளுர் கவிஞர். இங்கிலையில் அன்று திருவாதிரை மீன் ஒளிர்வது அவரது கண்ணுக்குப் புலணு கின்றது. சிவபெருமானுக்கு ஆதிரையான் என்ற பெயர் இருப் பதும் அவரது கினைவுக்கு வருகின்றது. உடனே பக்தி, நகைச்சுவை, வியப்பு முதலிய அனைத்தும் கலந்த உணர்ச்சி அவரிடம் எழுகின்றது. ஒரு பாடலும் அவர் உள்ளத்தில் உருவாகி நல்ல வடிவமும் பெறு கின்றது. - இனி, பாடலைப் பார்ப்போம் : மன்னிய நாண்மீன் மதிகனலி யென்றிவற்றை முன்னம் படைத்த முதல்வனப்-பின்னரும் ஆதிரையா னுதிரையான் என்றென் றயருமால் ஊர்திரை நீர் வேலி யுலகு.* இது கடவுள் வாழ்த்து விளக்கம் : மன்னிய-(வானத்தில்) கிலேயாய் இருக்கின்ற. காண் மீன் = நாள்- மீன்-கட்சத்திரம். மதி, கனலி எனப் பின் வருவதால் நாண் பாடவேற்றுமை : 1.0 என்றே 11 றயர்வுறுமீ ; அறையுமால். * இப்பாடலின் பின்னிரண்டடிகளேயும் நீலகேசி தெருட்டுக் கடவுள் வாழ்த்துரையில் சமயதிகாகர முனிவர் மேற்கோள் காட்டியுள்ளார்.