பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

? § முத்தொள்ளாயிர விளக்கம் ஒரு நாள் பாண்டியனின் வென்றி மேம்பாட்டைப்பற்றிச் சிந்திக் கின்ருர் கவிஞர். சிந்தனை ஒரு பாடலாக உருவெடுக்கின்றது. பாண்டியனின் படை வீரன் ஒருவன் மற்றெரு நண்பனுக்கு எடுத்தியம்பும் முறையில் பாட்டு வடிவம் பெறுகின்றது. பாட்டினைக் காண்போம் : நிறைமதிபோல் யானைமே னிலத்தார் மாறன் குடைதோன்ற ஞாலத் தரசர்-திறைகொள் இறையோ வெனவந் திடம்பெறுத லின்றி முறையோ! வெனதின்ருர் மொய்த்து. இதுவும் திறைபற்றிய பாடலே. விளக்கம் : கிறை மதி போல் முழு மதியம் போல. நீலத்தார் மாறன் குடை தோன்ற - நீல நிறமுள்ள குவளைப்பூ மாலையை அணிந்த பாண்டியனின் வெண்கொற்றக் குடை காட்சியளிக்க. நிறைந்த திங்களைப் போல் குடை தோன்றிற்று என்பதால் மாறனது தண்ணளியும் செங்கோன் மையும் விளங்குகின்றன. போருக்குச் செல்லுங்கால் அணிய வேண்டிய தும்பை மலரைக்கூட அரசன் சூடவில்லை. குடைநாட்கோள் செய்தவுடன் திறைப் பொருள்கள் வந்து குவிந்துவிடுகின்றன. அதனுல்தான் ஈண்டு லேத்தார் மாறன்’ என்ருர். இதன் நயம் எண்ணி உளங்கொள்ளத் தக்கது. ஞாலத்து அரசர்-இத்தொடர் பல சிற்றரசர்களைக் குறிக்கின்றது. மொய்த்து-நெருங்கிக்கொண்டு ; சூழ்ந்துகொண்டு. பலாப்பழத்தின்மீது ஈக்கள் மொய்ப்பதைப் பார்த்திருக்கின்ருேமே, அப்படி மொய்த்துக்கொண்டு என்றவாறு. முறையோ-திறையை வாங்காதிருப்பது நீதியோ? இறையோ... முறையோ என்பவற்றிலுள்ள ஒகாரங்கள் மாற்றரசர்கள் சேய்மையிலிருந்து கொண்டு கூவுவதை உணர்த்துகின்றன. * - (4)

  • கமமாழவாரின் ஒ ஓ உலகினதியல் பே" (திருவாசிரியம் 6-ஆம் பாசுரம்) என் பதற்கு ஒஓ’ என்று இருந்தார் இடமெல்லாம் செவிப்படும்படி கூப்பிடுகின்றர் ' என்ற பெரியவாச்சான் பிள்ளையின் வியாக்கியானப் பகுதியை ஒப்பிட்டு நோக்குக.