பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[6] வெற்றிமுரசு விளைவித்த செயல் ilண்டிய காட்டில் பல்லாண்டுகள் அமைதி கிலவுகின்றது. மக்கள் போர்ப்பறை ஒலிப்பதைக் கேட்டுப் பன்னட்களாகின்றன. அமைதிக்காலத்தில் சிலர் மாறனுக்குத் திறைகொடாமால் இறு மாந்து இருந்து விடுகின்றனர். குடை நாட்கோளோ வாள்நாட் கோளோ அவர்களை அசைக்க முடியவில்லை. அதுபற்றிய செய் தியை அறிந்தும் அவர்கள் வாளா இருந்து விடுகின்றனர். பாண்டியன் வெஞ்சினங்கொண்டு பகைமேற் செல்லுகின்ருன். மடைதிறந்தாற்போல் பாண்டியனின் படை மாற்றரசர்களின் நாடு களை நோக்கிப் புறப்படுகின்றது; பகைவரின் தேயத்தையும் நெருங்கி விடுகின்றது. போர்ப்பறையும் முழங்கப் பெறுகின்றது. இந் நிலையை அவர்கள் ஒருநாளும் எதிர்பார்க்கவே இல்லை. பாவம் ! என்ன செய் வார்கள்? ஓடி யொளிப்பதைத் தவிர வேறு வழி அவர்கட்டுப் புலப் படவில்லை. எதிர்த்து நிற்பதற்கோ வலி இல்லை; நெஞ்சில் உரமும் இல்லை. ஆகவே, மதிற் கதவுகளைத் திறந்துகொண்டு பகைவர்கள் யாவரும் நாற்புறமும் சிதறியோடுகின்றனர். இடியின் ஒலியைக் கேட்டால் அச்சம் நம்மைப் பிடுங்கித தின்னும்; குலை கடுங்கும். பாம்புகள் இந்த ஒலியைச் சிறிதும் சகிக்க முடியாது. இடியும் மின்னலும் சேர்ந்து தோன்றுங்கால் பாம்புகளின் உடலங்கள் புரண்டு துடிக்கும். இதல்ைதான் துன்ப உணர்ச்சியை எடுத்தியம்புவதற்குப் பாம்பின் நீண்ட உடலின் நெளிவையும் சுழிவை யும் துடிப்பையும் எடுத்துக்காட்டி விளக்குகின்ருேம். பாண்டியனுடைய போர்முரசின் ஒலிக்கு ஆற்ருது சிதறியோடிய பகைவர்கள் இடிமுழக்கம் கேட்ட நாகம்போல் அஞ்சி அஞ்சி ஒடு கின்றனர். அண்மையிலுள்ள மலையில் ஏறி ஆள் அரவம் இல்லாத இடங்களையும் கடந்து விடுகின்றனர். அங்குக் காட்டுப் பசுக்கள்