பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன்னுரைத்த கல் 23 மாறனுடைய படை வீரன் ஒருவன் மற்ருெருவனிடம் குதிரைகளின் மறச்செயலைக் கூறுவதுபோல் பாட்டின் வடிவம் அமைகின்றது. பாடலைப் பார்ப்போம்: நிரைகதிர்வேல் மாறனே நேர்நின்ருர் யானைப் புரைசை யறநிமிர்ந்து பொங்கா-அரசர்தம் முன்முன்னு வீழ்ந்த முடிகளுதைத்தமாப் பொன்னுரைகற் போன்ற குளம்பு. * இது குதிரைமறம். விளக்கம் : கிரை கதிர் வேல் மாறன் - அணி அணியாக ஒளி பொருங் திய வேற்படைகளையுடைய பாண்டியன். மாறன் - பாண்டியன். கேர் வின் ருர் - எதிர்த்து கின்ற பகைவர். புரைசை - யானையின் கழுத்திலிடும் கயிறு. அற அறுந்துபோகும்படியாக, நிமிர்ந்து பொங்கா - தலையெடுத்து மோதிச் சீறி ஆங்காரக் கொள்ள, பொங்கா - பொங்கி செய்யா என்னும் வாய் பாட்டு வினையெச்சப் பொருளில் வந்தது. 'அரசர்தம் முன் முன்கு வீழ்ந்த முடிகள்-என்பதனை தம்முன் முன்ன வீழ்ந்த அரசர் முடிகள் எனக் கூட்டிப் பொருள் உரைக்க வேண்டும். முடி கள் - கிரீடங்கள் ; இவை தங்கத்தாலாகியவை. உதைத்த மா - காலால் ஏற்றி இடறிச் செல்லும் குதிரைகள். குதிரைகள் மிகப் பல ; அவை யாவும் தம்முன்னே வீழ்ந்த மன்னரின் தங்கக் கிரீடங்களை இடறிச் செல்லுகின்றன. இதல்ை மாவின் குளம்புகள் பொனனுரைத்த கட்டளைக் கற்களைப் போன் ருகின்றன. போன்ற - போன்றன. - முன் முன்னு என்ற அடுக்கு பன்மையைக் குறிக்கின்றது. குதிரை களும் பல, மன்னரும் பலர், யானைகளும் பல என்பதை அது தெளிவாக்கு கின்றது. {6} {uா வே) ! 8. வீழ்ந்தார். தெருண்ட மேலவர் சிறியவர்ச் சேசினும், ஆவர்தம் மருண்ட புன்மையை மாற்றுவர்’ எனும்இது வழக்கே ; உருண்ட வாய்தொறும், பொன்உருள் உரைத்(து) உரைத்(து) ஒடி, இருண்ட கல்லேயும் தன்நிறம் ஆக்கிய இரதம். -கம்ப. பாலகாண்-சந்திரசயிலப்-செய்-8. என்ற கம்பசாமாயணப் பாடலில் தேரின் பொன் ஒலியன்ற சக்கரங்கள் இருண்ட قبیله های பொன்னிறமாக்கிய செய்தி கூறப்பெற்றிருப்பதை ஒப்பிட்டு மகிழ்க.