பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[10] யானையின் ஒட்டம் ஓட்டத்திலும் ஓர் அழகு உண்டு. வட்டரங்குகளில் (Circus) குதிரைகளை ஓட விடுவதையே ஒரு நிகழ்ச்சியாக அமைத்திருக்கின் றனர் அல்லவா? காதுகளை மடக்கிக்கொண்டு பூனை ஓடுவதைக் கண்டு நாம் மகிழவில்லையா? காதுகளே கிமிர்த்துக்கொண்டு காற்றி னும் கடுகியோடும் முயல்களையும், மானினங்களையும் கண்டு மகிழ் கின்ருேம். வேட்டைக்குச் செல்வோருக்கு இந்த அநுபவம் கிறைய இருக்கும். பாலூட்டப்பெற்ற பசுங்கன்று வாலைத் தூக்கிக்கொண்டு ஓடுவதிலும், காதை கிமிர்த்தி வாலேயும் தூக்கிக்கொண்டு திமிலை அசைத்த நிலையில் காளை ஒடுவதிலும் நமக்கு இன்பம் ஏற்படுகின் றது. விளையாட்டுப் போட்டிகளில் பல்வேறு ஓட்டங்களும் நிகழ்ச்சிக ளாக அமைவதிலிருந்து ஓட்டத்தின்மீதுள்ள கவர்ச்சி வெளியா கின்றது. ஒரு சமயம் பாண்டியனது பெரிய பட்டத்து யானை ஒடத் தொடங்குகின்றது. துதிக்கையைச் சுருட்டி கிமிர்த்திக்கொண்டும், மருப்புக்களைத் தூக்கிய கிலேயில் வைத்துக்கொண்டும், காதுகளை விரித்துக் கொண்டும் கொம்பன் ஓட்டம் பிடிக்கின்றது. குன்றனய உடலைக் கொண்ட ஒரு விலங்கு தப்படிகளே (Pace) எட்டி வைத்துத் தரையெல்லாம் அதிரும்படி ஒடுவதைப் பார்க்கும் அனைவரும் கட்டா யம் அஞ்சத்தான் செய்வர். ஆயினும், அந்த ஓட்டத்தின் பெரு மிதத்தையும் அழகினையும் கண்டு வியந்து அநுபவியாமல் இருத்தல் முடியாது. கவிஞர் இந்த ஒட்டக் காட்சியில் தமது உள்ளத்தைப் பறிகொடுக்கின்ருர், அஃது அழகிய பாடலாக வடிவங் கொள்ளு கின்றது. 'யானையின் தோற்றம் மலையைப் போன்றது; அது பிளிறும் ஓசை கடல் முழக்கத்தையொத்தது ; அதனிடமிருந்து கொட்டும் மதநீர் மேகம் மழை பொழிவதை நிகர்த்தது ; கடுங்காற்றினும்