பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யானையின் ஓட்டம - 29 விரைந்து செல்லும் நடையினையுடையது ; பகைவர்களைக் கொல்லு வதில் எமனும் இதனிடம் பிச்சை வாங்கவேண்டும்!” என்று அவரது உள்ளங் கருதுகின்றது. இனி, பாடலைப் பார்ப்போம் : தோற்ற மலைகட லோசை புயல்கடாஅங் காற்றி னிமிர்ந்த செலவிற்ருய்க் - கூற்றுங் குறியெதிர்ப்பை கொள்ளுந் தகைமைத்தே யெங்கோன் எறிகதிர்வேல் மாறன் களிறு, விளக்கம் : தோற்றம், மல்ே கடல், ஓசை; புயல், கடாஅம் - என்று பிரித்துப் பொருள் உரைக்க. ஒசை - (பிளிறும்) ஒலி. புயல் - மேகம். கடா அம் - மத நீர், காற்றின் கிமிர்ந்த செலவிற்ருய் - காற்றைவிட விரைவாகச் செல்லக்கூடியதாய், கூற்று எமன். குறியெதிர்ப்பு - ஒரு சொல் அளவு குறித்து வாங்கி அவ் வாங்கியவாறே எதிர் கொடுப்பது என்பர் பரிமேலழ கர் (குறள்-221 இன் உரை); இரவல் என்பது இதன் பொருள். தகை மைத்தே தன்மையுடையது. எறிகதிர்வேல் மாறன் - ஒளி உமிழும் வேலைக் கையகத்தேயுடைய பாண்டியனின் ஆண் யானே. பாண்டியனின் படைவீரன் ஒருவன் மற்ருெரு வீரனுக்கு யானே யின் செயலை எடுத்தியம்பும் முறையில் பாடல் வடிவம் கொண்டுள் ளது. அது யானையின் ஓட்டத்தை அப்படியே படம் பிடித்துக் காட்டு கின்றது. அச்சம், அழகு என்ற இரண்டு பாவங்களும் அருமையாய்க் கலந்துள்ளன. (9)