பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{ i ! } யானைக்கும் நாணம் ! போர் மும்முரமாக நடைபெறுகின்றது. கணக்கற்ற வீரர்கள் மடிந்து சாய்கின்றனர். பிளிறுகின்ற மாறனின் களிற்றின்முன் மாண்ட மாவீரர்களின் தொகை மிகப் பெரியது. - பாண்டியனின் பட்டத்து யானே சினத்தால் பிளிறிக்கொண்டு புறப்படுகின்றது. தன்னை அணுகியவர்களைக் கொல்லும் பல்வேறு பொறியமைப்புக்களையும் பொருட்படுத்தாமல் அவற்றைக் கொண்ட மதிலை நெருங்கி அதன் நொறுக்கத் தொடங்குகின்றது. சிறிது நேரத்தில் மதிலும் நொறுங்கி மாற்ருர் கோட்டையும் தூள் தூளா கின்றது. இச்செயலில் அழகாய் நீண்டிருந்த யானையின் கொம்புகள் முறிந்து விடுகின்றன. எனினும், அது பகை மன்னர்களை நெருங்கி அவர்கள்மீது பாய்ந்து அவர்களைக் கீழே தள்ளிக் குத்திக் கிழிக்கின் றது. மாற்ருரின் குடல், ஒடிந்த கொம்புகளில் உறைபோல் மாட்டிக் கொள்ளுகின்றது. கொம்புகளில் குடல் தொங்கும் நிலையில் வேலை முடிந்து திரும்புகின்றது யானே. இந்த நிலையைக் கவிஞர் எண்ணு கின்ருர், நிகழ்ச்சிக்கு வடிவங் கொடுக்க விழைகின்றது அவரது கவிதையுள்ளம்; அங்ங்ணமே அமைக்கின்ருர், இந்த கிகழ்ச்சியை மாவீரன் ஒருவன் மற்ருெரு வீரனுக்குக் கூறுவதுபோல் பாடல் அமைகின்றது. போர் முடிந்ததும் வீரர்கள் தமது காதலிமாரைக் காண வீடு நோக்கி விரைவதாகக் கவிதை புனைவது இலக்கிய மரபு. சங்க இலக்கியங்களில் இம் மரபினைக் காணலாம். போர் முற்றிய யானையும் அங்ங்னமே தன் பிடியைக் காணப் புறப்படுவதாகக் கற்பனை செய்கின்ருர் கவிஞர். ஒடிந்த கொம்புகளைக் கண்டு பிடி யானை தன்னை இழிவாக கினைக்குமே என்ற காரணத்தால்தான் ஆண்யான குடலால் கொம்புகளை மறைத்துக் கொண்டு வருகின்றது என்று தன் குறிப்பை ஏற்றிப் பேசுகின்ருர்,