பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 12 போர்க்களக் காட்சி நம்மில் பெரும்பாலோர் போர்க்களத்தைப் பார்த்ததே இல்லை. பண்டைக்காலத்தில் போர் நடப்பதற்கென்று ஓர் இடம் இருந்தது. அறப்போரும் கடந்தது. இன்று அப்படி இல்லை அல்லவா ? இது தூங்குபவன் தொடையில் கயிறு திரிக்கும் காலம் ; ஏமாந்தவன எதிர்த்து வீழ்த்தும் காலம். ஆனல், கம்பராமாயணம், வில்லி பாரதம், கலிங்கத்துப் பரணி போன்ற நூல்களைப் படித்தவர்கள் போர்க்களம் இன்ன தென்பதை நன்கு அறிவர். ஒரு சமயம் பாண்டிய நாட்டில் கடும் போர் ஒன்று கிகழ் கின்றது. எங்குப் பார்த்தாலும் ஒரே குருதி வெள்ளம் வீரர்கள் பலர் குத்துண்டு வீழ்ந்து கிடக்கின்றனர். அவர்களோ அருந்திறல் மிக்கவர்கள். நல்ல வீரர்களாக இருப்பவர்களுடன்தானே பாண்டி யனின் படைகள் எதிர்த்து கிற்கும் ? வாய்மடித்துக் கிடக்கும் வீரர் களது கிலேயும், இறந்த பின்னரும் புருவமுரிவுடனும் செங்கண் ணுடனும் திகழும் வீரர்களுடைய கிலேயும் பார்ப்பவர்கட்கு அச்சம் விளைவித்து கிற்கின்றன. இந் நிலையில் ஊனுண்ணவேண்டும் என்ற நோக்கத்துடன் நரிக் கூட்டங்கள் போர்க்களத்திற்குத் திரண்டு வருகின்றன. ஆணுல், அவைகள் களத்தில் குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடந்த சில வீரர்களைக் கண்டு அருகில் வர அஞ்சுகின்றன. நெருங்கிச் சென்ருல் அவ்வீரர்கள் தம்மைக் குத்திக் கொன்றுவிடுவர் என்று நினைத்து நடுக்கங்கொண்டு நெடுந்தொலைவிலேயே கிற்கின்றன.