பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒகை உயர் மாடத்தில் கூகை 37 இது பகைப்புலம் பழித்தல். விளக்கம் : வாகை வனமாலை வாகைப் பூப்போல் பொன்குல் செய்யப்பெற்ற அழகிய மாலை; வாகைப்பூவும் என்று கொள்ளினும் அமையும்; இது வெற்றி மாலை. அரசு உறையும் - அரியணையில் அரசர்கள் வீற்றிருக் கும். ஒகை - மகிழ்ச்சி ; உவகை என்பதன் திரிபு, ஓகை உயர்மாடத்து - கொண்டாட்டங்களுக்காக அமைத்த உன்னதமான மண்டபத்தில், கூகை - பெருங்கோட்டான். படுபேய்க்குப் பாட்டு அயரும் பண்பிற்றே - முது பேய் உறங்குவதற்குப் பாட்டுப் பாடும் தன்மையுடையதாக மாறிவிட்டது. தென் னன் - பாண்டியன், விடுமாற்றம் - அரசன் தூதனிடம் சொல்லிவிட்ட சொல், பகையரசரது ஊரும் காடும் பாழ்பட்டுப்போயின என்ற செய்தி யைப் பாட்டு அழகிய வேகத்துடனும் பாவத்துடனும் காட்டு கின்றது. (13)