பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[15] திறை செலுத்தாத நாரு அக்காலத்தில் பாண்டிய நாடு ஒரு பேரரசாகத் திகழ்ந்தது. பாண்டியனுக்குக் கீழ்ப் பல சிற்றரசர்கள் வாழ்கின்றனர். அவர்கள் யாவரும் குறிப்பிட்ட காட்படி, குறிப்பிட்ட கணக்குப்படிப் பாண்டி யனுக்கு ஒழுங்காகத் திறை செலுத்தி வாழ்கின்றனர். யாரோ ஓர் அரசன் அரிதாகக் கப்பம் கட்டத் தவறில்ை பாண்டியன் அவன் மீது முறைப்படி நடவடிக்கைகளை எடுப்பது வழக்கம். முதலில் அவன் ஒரு தூதனை அனுப்பி முறைப்படி திறை செலுத்து மாறு எச்சரிக்கை செய்வான். அதற்கும் அவன் அசையாவிட்டால் அச் சிற்றரசனின் ஆகிரைகளை யெல்லாம் கொண்டுவரச் செய் வான். அப்படிச் செய்தும் அச் சிற்றரசன் வழிக்கு வரவில்லை யெனில், போர் தொடங்குவான். ஆகிரைகளைக் கவருதல் போர் தொடங்குவதற்கு அறிகுறியாக அமைந்தது அக்காலத்தில். போர்ப் பறையின் முழக்கத்தைக் கேட்டு அந்நாட்டுப் பெண்கள் தமக்கேற்ற புகலிடங்களைத் தேடிக்கொள்வர். முதியரும் பிணியாளரும் சூல் கொண்ட பெண்டிரும் காட்டைவிட்டு அகன்று, தத்தமக்கேற்ற இடங்களைச் சென்று அடைவர். அதன் பிறகு போர் தொடங்கும். பாண்டியனிடம் பெரிய யானைப்படை இருந்தது. அதிலுள்ள ஒவ் வொரு யானையும் முரட்டுத்தனம் உடையது. அதனால் அது வெளியில் செல்லும்பொழுது அதன் முதுகில் பெரிய முரசினை வைத்து அடித்துக்கொண்டு செல்வது வழக்கம் தீயணைக்கும் பொறி செல் லுங்கால் கண்டாமணியை அடித்துக்கொண்டு போவதுபோல. இந்த யானைப்படைகளை ஏவி அச்சிற்றரசனுடைய நாட்டினைப் பாழாக்கி விடுவான் பாண்டியன். பிறகு அச்சிற்றரசனது நாட்டில் பேய்கள் தாம் வாழும். எல்லாம் சுடுகாட்டு மயமாகிவிடும்.