பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறை செலுத்தாத காடு 39 இந்த கிலேயைக் கவிதையில் காண்போம் : பறைநிறை கொல்யானைப் பஞ்சவற்குப் பாங்காய்த் திறைமுறையி னுய்யாதார் தேயம்-முறைமுறையின் ஆன்போ யரிவையர்போ யாடவர் யாயின்ற ஈன்பே யுறையு மிடம். இதுவும் பகைப்புலம் பழித்தல் ஆகும். விளக்கம் : பறையறை கொல் யானை மன்னனுடைய கொல் யான களை நீர்த்துறைக்குச் செல்ல விடுங்கால் முன்னர் அதன் வருகையைப் பறை யறைந்து அறிவித்தல் வழக்கம். இந்த முறையின,

  • நிறையழி கொல்யானை நீர்க்குவிட் டாங்குப்

பறையறைந் தல்லது செல்லற்க என்னு இறையே தவறுடை யான்’ என்ற குறிஞ்சிக் கலியாலும் (குறிஞ் - 20) அறியலாம். பஞ்சவர் . பாண்டியர். பாங்காய் - முறையாக, ஒழுங்காக. திறை முறையின் உய்யாதார் - தம் முன்னேரும் தாமும் இதற்கு முன்னர் செலுத்தி வந்ததுபோல் செலுத்தாதவர்கள், முறை முறையின் ஒன்றன் பின் ஒன் ருக. ஆன்போய் - ஆகிரைகள் அகன்று. அரிவையர் - பெண்கள். ஆட வர் ஆண்கள்; இவர்கள் போரில் இறந்தோ அல்லது காடு கோக்கிச் சென்ருே இல்லாது ஒழிவர் என்றவாறு. இங்ங்ணம் எல்லோரும் அகன்ற பிறகு அந்த இடத்தில் இளம் பேய்கள் உறையும் என்பதைக் குறிக்கவே ஈன்பேய் உறையும் இடம் என்ருர், தாய்ப்பேய்களும் ஆண் பேய்களும் போர்க்களத்தில் இறக் தொழிந்தோரது ஊனினை உண்ணச் சென்று விடுகின்றன வாதலின், இளம் பேய்கள் மட்டிலும் தங்கியிருக்கின்றன. சிற்ற ரசனின் நாடும் ஊரும் அவ்வளவு பாழாய்ப்போய்விடுகின்றன. இச் செய்தியைப் பாடல் அரிய வேகத்தோடும் பாவத்தோடும் காட்டு கின்றது. - (14) (பா , வே.) பறைகின்ற, 3 பஞ்சவர்க்குப்; 11 யாடவர்; 12 யாயின்pே: போயின்றே; யாவிற்றே.