பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 முத்தொள்ளாயிர விளக்கம் ஆவியைக் கவரேனேல் வெந்தழலில் வீழ்வன் ; இதுமறை மொழி என்று சூளுரைக்கின்றன். உணவு உண்ணவும் அவன் மனம் செல்ல வில்லை. கண்ணனும் அருச்சுனனும் அன்றிரவு முடிவதற்குள் கயிலைப் பொருப்பனேக் கண்டு வரச்செல்லுகின்றனர். வழியில் அருச்சுனன் மிகவும் அயர்ச்சியடைகின்ருன். கனியும் நீரும் அருந்திப் பசியையும் விடாயையும் போக்கிக்கொள்ளுமாறு தூண்டுகின்ருன் கண்ணன். கண்ணுதலோதனைப் பூசனை புரிய வில்லையே, எங்ஙனம் உண்பது ? என்று மறுமொழி கூறுகின்ருன் பார்த்தன். பார்த்தசாரதியும் என் முடிமீது கானக மலரினைத்துவி பூசனைபுரிக யானும் அரனும் ஒருவரே என்பதை அருவரையடைக் ததும் காண்பாய் என்கின்றன். அங்ங்னமே தனஞ்செயனும் மன்றலந்துழாய் முடி மாயன சிவாகம உரையினுல் மலர்தூவி வணங் கிக் கனியுண்டு அயர்ச்சி நீங்குகின்ருன். பிறகு கண்ணனுடன் கருடன்மீது ஏறிக் கயிலையங்கிரிக்குச் சென்று கண்ணுதலோனைப் பணிகின்ருன் தான் கண்ணனின் முடியிலேற்றிய மலர்கள் கண்ணு தலோனின் அடித்தலத்தில் கிடத்தலைக் கண்டு இறும்பூது அடை கின்றன். பின்பு பரமனிடம் படைக்கலம் பெற்று வந்து பகையறுக் கின்றன். இந்த வரலாற்றை எண்ணுகின்ருர் கவிஞர். உடனே கவிதையும் உருவாகி வடிவமும் பெற்றுவிடுகின்றது. இனி, பாடலைக் காண்போம்: - செங்க னெடியான்மேற் றேர்விசய னேற்றியபூப் பைங்கண் வெள்ளேற்ருன்பாற் கண்டற்ருல்-எங்கும் முடிமன்னர் சூடியபூ மொய்மலர்த்தார் மாறன் அடிமிசையே காணப் படும். * இதுவும் பாண்டியனின் புகழ் பாடியதே. தீர்த்த னுலகளந்த சேவடிமேற் பூந்தாமம் சேர்த்தி யவைவே சிவன்முடிமேற் ருன்கண்டு பார்த்தன் றெளிந்தொழிந்த பைந்துழா யான்பெருமை பேர்த்து மொருவராற் பேசக் கிடந்ததே. என்ற திருவாய் மொழியையும் (2 8-6; ஈண்டு எண்ணி மகிழ்க, மேலும்,