பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனப் பற்று! 53 செய்யார் எனினும் தமர் செய்வர்' என்ற பழமொழி அவள் நினைவிற்கு வருகின்றது. "தெரிந்து கொண்டேன்; இந்த வளையல்கள் கீழே விழுந்து உடையுமென்றுதான் பாண்டியனின் வலம்புரி ஒலித் திருக்கின்றது. அந்த ஒலியைக் கேட்டுத்தானே இவைகளும் கின்றன. இந்த வளையல்களுக்கு அந்த வலம்புரி உறவு அல்லவா? இன உறவு எப்பொழுதாவது உதவுமல்லவா?’ என்று அவள் தன் தோழியிடம் வாய் விட்டுப் பேசுகின்ருள். இந்த நங்கையின் உணர்ச்சியையும் மனநிலையையும் காட்டும் கவிஞரின் சொல்லோவியம் இது: செய்யா ரெனினுந் தமர்செய்வ ரென்னுஞ் சொல் மெய்யாதல் கண்டேன் விளங்கிழாய்-கையார் வரிவளை நின்றன. வையையார் கோமான் புரிவளை போந்தியம்பக் கேட்டு. இது கைக்கிளை. இதனைத் தொடர்ந்து வரும் பாண்டியனைப் பற்றிய பாடல்கள் யாவும் இப்பொருளுடையனவே. விளக்கம் : செய்யார் எனினும் தமர் செய்வர் என்ற பழமொழியை பழமொழி நானுற்றிலும் காணலாம். தமர் - உறவினர். மெய்யாதல் கண் டேன் . பழமொழியின் உண்மையை இப்பொழுது அறிந்து கொண்டேன். விளங்கு இழாய் - ஒளிபொருந்திய அணிகளை அணிந்த தோழியே. கையார் வரி வளை.கையிலுள்ள செதுக்கு வேலைப்பாடுடைய கீற்று வளைகள். கின்றன . (நெகிழ்ந்து விழாது) கின்றன. வையையார் கோமான் - பாண்டியன், புரிவளை போந்து இயம்பக் கேட்டு - திருகிய சங்கின் ஒலி வந்த காரணமாக, புரிவளை வரிவளைக்குத் துணை செய்தது என்ற நயத்தை எண்ணி மகிழ்க. சங்கு வளையல்கட்கு எச்சரிக்கை செய்வதாக அமைந்த பாவம் நம் இதயத்தைத் தொடுகின்றது. (23) {uா வே.) 1, வையத்தார்.

  • மெய்யா உணரிற் பிறர் பிறர்க்குச் செய்வதெவன்

மையார் இருங்கூந்தல் பைந்தொடி! எக்காலும் செய்யார் எனினும் தமர்செய்வர் பெய்யுமாம் பெய்யா தெனினும் மழை. சன்ற பாடலில் இதனைக் காண்க.