பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ళీ4 முத்தொள்ளாயிர விளக்கம் ணன் . செந்தூரம் போன்ற நிறத்தையுடையவன்; செக்கிறத்தன் என்றவாறு. சேலேகம் . செந்துரம் ; சந்தனம் எனினும் அமையும். சேரி புகுதலும் . ஊருக்குள் நுழையவும் ; அதாவது மன்னன் ரோடி உன்மீது ஏறி ஊருக்குள் நுழையும்போது. எம் சாலேகம் சார நட - எங்கள் வீட்டுச் சாளரத்தை யொட்டி நடந்துவரவேண்டும். சாலேகம்-சாளரம் ; பலகணி. வடமொழியில் ஜாலகம் என்ற சொல் பல கணித்துளையைக் குறிக்கும். அச்சொல் இங்கு சாலேகம் எனத் திரிந்து வந்து சாளரம் எனப் பொருள் பட்டது. கங்கையின் உள்ளக் கிழியில் அமைந்த ஓவியத்தை அப்படியே காட்டுகின்றது இப்பாடல். செய்ய சடைமுடியென் செல்வனையான் கண்டெனது கையறவும் உண்மெலிவும் யான்காட்டப்-பையவே காரேறு பூஞ்சோலைக் காளத்தி யாள்வார்தம் போரேறே இத்தெருவே போது.* என்ற நக்கீரதேவ நாயனரின் பாடலையுங் காண்க. இரண்டையும் ஒப்பிட்டு மகிழ்க. (25)

  • கைல்யாதி - காளத்தி பாதி அக்தாதி. செய்.18,