பக்கம்:முந்நீர் விழா.pdf/100

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அமைச்சர் முத்திருளப்பர்

91

வர்கள்-பாராட்டுவது வியப்பு அல்லவே ஒரு புலவர் இந்த நிகழ்ச்சியை அழகாகப் பாடினார்.

முத்திருளப்ப பிள்ளை காலத்தில் சேதுப்திக்கு யாரும் பகைமன்னர் இல்லை. ஆதலால் போரும் இல்லை. இப்போது ஒருவன் மாத்திரந்தான் வில்லையும் அம்புகளையும் வைத்துக் கொண்டு இடையீடு இல்லாமல் போர் தொடுத்துக்கொண்டே இருக்கிறான். அதற்குரிய வாய்ப்பை அமைச்சர் ஏற்படுத்தி விட்டார். அவர் திருமணம் செய்து வைத்தபடியால், கணவன் மனைவி யானவர்கள் பலர். அவர்களிடம் மன்மதன் இப்போது தன் கைவரிசையைக் காட்டிக் கொண்டிருக்கிறான். அவனுக்கு ஓய்வு இல்லை. ஒழிவு இல்லை! அந்த மன்மதன் ஒருவனைத் தவிர, சமருக்கு என்று எதிர்த்து வருகிற மன்னர் இந்தத் தரையில் இல்லை.

அமரிக்கை யாளன்,முத்து ராமலிங்க
சேதுபதி அவனிக் கெல்லாம்
சுமுகப்ர தாபன்எங்கள் முத்திருளப்
பேந்த்ரமந்த்ரி துலங்கு நாளில்
சமருக்கென் றெதிர்மன்னர் தரையில்இலை,
மதன்ஒருவன் தவிர.

[அமரிக்கை - சாந்தம். சேதுபதியின் அவனிக்குப் பிரதாபன். சமர் - போர்.)

இதற்கு முன் திருமணம் ஆகாத குமரிப் பெண்கள். பலர் அங்கங்கே முக வாட்டத்தோடு இருந்தார்கள். இப்போது யாவருக்கும் கல்யாணம் ஆகிவிட்டது. ஊரில் மருந்துக்கும் ஒரு குமரி இல்லை. குமரி இல்லையென்றா சொன்னார்? இல்லை, இல்லை. ஒரு குமரி இருக்கிறாள். சேது வேந்தன் நாட்டில் போர் செய்ய ஒரு மன்னரும் இல்லை யென்றாலும் மன்மதன் ஒருவன் இருப்பது போல, மணம் செய்து கொள்ளாத குமரிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முந்நீர்_விழா.pdf/100&oldid=1207815" இலிருந்து மீள்விக்கப்பட்டது