பக்கம்:முந்நீர் விழா.pdf/101

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

 முந்நீர் விழா


பெண் ஒருத்தியும் இல்லையென்றாலும், ஒரே ஒருத்தி இருக்கிறாள். அவள் நித்திய குமாரி, நித்திய கன்னிகை. அவள் யார் தெரியுமா? சாட்சாத் கன்னியா குமரிதான். அவளுக்கு மணம் முடிக்க யாராலே ஆகும்:

இவ்வாறு நயமாகப் பாட்டைப் பாடி முடித்தார் புலவர்.

அமரிக்கை யாளன்முத்து ராமலிங்க
சேதுபதி அவனிக் கெல்லாம்
சுமுகப்ர தாபன்னங்கள் முத்திருளப்
பேந்த்ரமந்த்ரி துலங்கும் நாளில்
சமருக்கென் றெதிர்மன்னர் தரையில்இலை
மதன்ஒருவன் தவிர்: மின்னார்
குமரிக்குள் கன்யாகு மரியல்லால்
மற்றிலைப்பெண் குமரி தானே

!

3

சேதுபதி வேந்தர்களின் பாதுகாப்பிலே இராமேசுவரம் திருக்கோயில் இருந்து வந்தது. அக்கோயிலில் பல வகையான திருப்பணிகளை அவர்கள் செய்திருக்கிறார்கள். வெறும் மணற் பரப்பான இராமேசுவரத் தீவில், கடல் கடந்து சென்று அவ்வளவு பெரிய திருக்கோயிலைக் கட்டுவதற்கு எத்தனை ஆற்றல் வேண்டும்

இரண்டு பிராகாரங்கள் அக்காலத்தில், திருக்கோயிலுக்கு இருந்தன. மூன்றாவது பிராகாரம் ஆரம்பித்திருந்தார்கள். அதைக் கட்டி முடிக்கவேண்டும் என்ற எண்ணம் அமைச்சர் முத்திருளப்பருக்கு உண்டாயிற்று. மன்னர் உடன்பட்டார். அக்காலத்தில் சின்னப் பிரதானியாக இருந்தவர் கிருஷ்ணயங்கார் என்பவர். அவரும் இந்தத் திருப்பணியில் ஈடுபட்டுத் தொண்டு புரியச் சித்தமானார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முந்நீர்_விழா.pdf/101&oldid=1207824" இலிருந்து மீள்விக்கப்பட்டது