பக்கம்:முந்நீர் விழா.pdf/108

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நெட்டிமால்ப் புலவர்

99



சவ்வாதுப் புலவர் சிறிதும் யோசனையின்றி, "சர்க்கரை தொண்டை மட்டும்; சவ்வாது கண்ட மட்டும்" என்று சொன்னார். சர்க்கரையை விழுங்கினால் தொண்டைவரை இனிக்கும்; விழுங்கின பிறகு அதன் இனிமை தெரியாது. சவ்வாது காணும் போதெல்லாம் இன்பம் தரும். சர்க்கரையை விடச் சவ்வாது சிறந்தது. என்ற கருத்தோடு இதைச் சொன்னார்.

சர்க்கரைப் புலவர் விடுவாரா? சவ்வாதுப் புலவர், "சர்க்கரை தொண்டை மட்டும்; சவ்வாது கண்ட மட்டும்' என்று சொல்லி நிறுத்தினவுடனே, "அதுவும் அந்த மட்டுந்தானே?" என்றார். 'சவ்வாது கண்ட மட்டும்' என்பதில், கண்ட மட்டும் என்பது 'கண்டம் மட்டும்' என்றும் பிரிக்கும்படி அமைந்திருக்கிறது. "தொண்டை மட்டும் என்றால் என்ன? கண்டம் மட்டும் என்றால் என்ன? இரண்டும் ஒன்றுதானே?" என்ற கருத்தில், "அதுவும் அந்த மட்டுந்தானே?" என்று கேட்டார் சர்க்கரைப் புலவர்.

இந்தச் சமற்காரப் பேச்சிலே இன்புற்ற மன்னர் "சர்க்கரையும் சவ்வாதும் சரியே என்பதை நீங்கள் நிரூபித்து விட்டீர்கள்" என்று சொல்லிச் சமாதானப் படுத்தினார்.

2

ம்பராமாயண விரிவுரை நடந்துகொண்டிருந்தது. கடல்தாவு படலத்துக்குப் புலவர் விளக்கம் கூறிக் கொண்டிருந்தார். அநுமன் கடலைத் தாவிய நிகழ்ச்சியைப் புலவர், கம்பன் பாடலிலிருந்து எடுத்துரைத்தார். அப்போது மன்னர், "அவர் எப்படித் தாவினர்" என்று வியப்புற்றுக் கேட்டார்.

மிகவும் ஊக்கத்தோடு விரிவுரை ஆற்றிக்கொண்டு வந்த புலவர் காதில் இந்தக் கேள்வி விழுந்ததும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முந்நீர்_விழா.pdf/108&oldid=1214821" இலிருந்து மீள்விக்கப்பட்டது