பக்கம்:முந்நீர் விழா.pdf/43

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

முந்நீர் விழா



சமுத்திரம் என்று பெயர் பெறாமல் தியாக சமுத்திரம் என்ற பெயர் பெற்றது' என்றார்.

'அப்படியானால் தியாக சமுத்திரம் என்றே இருக்கலாமே!’ என்றார் முன்னவர்.

“பழைய பெயர் கூவம். அதனை மறக்காமல் அதையும் சேர்த்து வழங்கு கிறோம்” என்றார் ஊர்க்காரர்.

"தியாக சமுத்திரம் என்கிறீர்களே; இந்த ஊரில் கொடையாளிகள் மிகுதியோ?” என்று கேட்டார் வெளியூர்க்காரர். -

"எத்தனையோ பேர் இருக்கிறார்கள். இந்த ஊர்ப் பொற்கொல்லர் நாராயணருடைய பெருமையை நீங்கள் கேள்விப்பட்டதில்லையோ?” என்றார் ஊர்க்காரர்.

"அவர் யார்?" "நீங்கள் அவர் பெயரை அறியாமல் இருப்பது மிக்க வியப்பாக இருக்கிறது. அவரையே தியாக சமுத்திரம் என்று சொல்ல வேண்டும்.' - 'அவரை நான் பார்க்கலாமா?' என்று வந்தவர் கேட்டார்.

'நன்றாகப் பார்க்கலாம்' என்றார் உள்ளுர்க்காரர். இருவரும் நாராயணரிடம் சென்றார்கள். உள்ளுர்க்காரர் தங்கள் இருவருக்குமிடையே நிகழ்ந்த உரையாடலைத் தெரிவித்தார். வெளியூர்க்காரர் அவர் சொல்வது உண்மைதான் என்றார். பொற்கொல்லர் புன்முறுவல் பூத்தார்.

'கூவம் என்றால் கிணறு என்பது உண்மைதான். இந்த ஊரில் கிணறும் தியாக சமுத்திரமாக இருக்கும்" என்றார் நாராயணர்.

அவர் கூறியதன் குறிப்பை முன்னால் இருந்த இருவரும் உணர்ந்து கொள்ளவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முந்நீர்_விழா.pdf/43&oldid=1214768" இலிருந்து மீள்விக்கப்பட்டது