பக்கம்:முந்நீர் விழா.pdf/46

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கூவம் தியாக சமுத்திரம்

37



தன்னால் இசைபெறக் கூவம்
தியாக சமுத்திரம்என்று
அங்நாள் ஒருவன் நெடுந்தூண்டில்
இட்டிட ஆங்கொருமீன்
பொன்னால் அமைத்துப் பொருந்திடச்
சேர்த்துப் புகழ்கொண்டதால்
மன்னா உலகத்து மன்னிய
சீர்த்தொண்டை மண்டலமே.

3

த்தகைய சிறப்பைப் பெற்று வாழ்ந்த நாராயணரைப் பல புலவர்கள் பாடினார்கள். அவர் உலக வாழ்வை நீத்தபோது, ஒரு புலவர் பாடியுள்ள பாடல் உள்ளத்தை மிகவும் உருக்குவது.

'உலகத்தில் கொடுப்பவர் எண்ணிக்கை மிகக் குறைவு; யாசகம் பண்ணுவோர் தொகைதான் பெரிது. இத்தகைய உலகத்தில் நாராயணன், பெருங்கொடையாளியாக விளங்கினான். அவனைப் போய்ப் படுபாவி யாகிய எமனே, நீ கொன்றுவிட்டாயே! அடுப்புக்கரி வேண்டுமென்று பயன் இல்லாத மரங்களை வெட்டலாம். கற்பகத்தை வெட்டலாமா? நாராயணன் இரவலர்களுக் கெல்லாம் கற்பகச் சோலையாக இருந்தானே? கரிக்காகக் கற்பகப் பூஞ்சோலையை வெட்டலாமா?’ என்று புலம்பினார் அவர்.

இடுவோர் சிறிது இங்கு இரப்போர் பெரிது:
கெடுவாய்! நமனே, கெடுவாய்!-படுபாவி!
கூவத்து நாரணனைக் கொன்ருயே! கற்பகப்பூங்
காவெட்ட லாமோ கரிக்கு?

(இடுவோர் - கொடுப்பவர். கா - சோலை.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முந்நீர்_விழா.pdf/46&oldid=1214774" இலிருந்து மீள்விக்கப்பட்டது