பக்கம்:முந்நீர் விழா.pdf/56

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விச்சுளிப் பாய்ச்சல்

47


பாண்டியனுக்கு இன்னும் தெளிவு ஏற்படவில்லை. 'அவனை நினைத்துப் புலம்புவானேன்?" என்றான்.

"நான் இவளைப் பெற்ற தந்தை; அவர் வளர்க்கும் தந்தை. இனி உயிர் வாழ முடியாது என்ற எண்ணத்தின்மேல் அவரை நினைத்து அழுகிறாள்...' கிழவனுக்கு மேலே பேசமுடியவில்லை. தொண்டை அடைத்தது.

'பாடல் யார் பாடியது?” .

"இந்தப் பாவி மகள் இப்போது பாடுகிறாள்!” கிழவன் விம்மத் தொடங்கினான் .

பாண்டியன் அமர்ந்திருந்தவன் எழுந்தான். அவனும் உணர்ச்சி வசப்பட்டுப் போனான். 'இவள் தமிழ்ப் புலமை உடையவளா!" என்ற கேள்வியிலே அவனுடைய தமிழ் அன்பும் மதிப்பும் புலனாயின.

"பெண்ணே, நீ கவலைப்படாதே இனி நீ ஆட வேண்டாம். உன் அழுகையை நிறுத்தி, பாட்டை மறுபடியும் சொல்' என்றான்.

அவள் துக்கத்தை அடக்கிக்கொண்டு அந்தப் பாட்டை மெல்லச் சொன்னாள். . .

2

சென்னைக்கு அருகில் அயனம்பாக்கம் என்ற ஊர் இருக்கிறது. இப்போது புழலேரி என்று வழங்கும் ஏரி உள்ள ஊருக்குப் புழல் என்று பெயர். தொண்டைமண்டலத்தைப் பழங்காலத்தில் இருபத்து நான்கு கோட்டங்களாகப் பிரித்து, ஆட்சியை நடத்தி வந்தார்கள். அந்தக் கோட்டங்களில் ஒன்று புழற்கோட்டம்; அதன் தலைநகர் புழல். அந்தக் கோட்டத்தைச் சார்ந்தது அயனம்பாக்கம். அயனம்பாக்கம் என்பதைப் புலவர்கள் அயன்றை என்று சொல்வார்கள். அவ்வூரில் சடையனர் என்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முந்நீர்_விழா.pdf/56&oldid=1207527" இலிருந்து மீள்விக்கப்பட்டது