பக்கம்:முந்நீர் விழா.pdf/57

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

முந்நீர் விழா

 பெயருள்ள வேளாளச் செல்வர் ஒருவர் இருந்தார். தம்முடைய செல்வத்தைப் பிறருக்கு வழங்குவதில் இன்பம் காணுகிறவர் அவர்.

தமிழ்ப் புலவர்களோடு பொழுது போக்குவதில் அவருக்கு விருப்பம் அதிகம். அதனால் அவரை நாடி அடிக்கடி கவிஞர்கள் வந்து கொண்டிருப்பார்கள். தங்களுக்கு எவ்வகையான குறைகள் இருந்தாலும் அயன்றைச் சடையனர் போக்கிவிடுவார் என்ற எண்ணம் புலவர் நெஞ்சில் உண்டாகும்படி அவர்களுக்கு வேண்டியவற்றை வழங்கிப் புகழ்பெற்ருர் அந்த வேளாளச் செல்வர்.

அயன்றைக்கு ஒருநாள் முன்பு சொன்ன விச்சுளிப் பாய்ச்சலில் வல்ல பெண்மணி தன் தந்தையுடன் வந்தாள். ஊரில் பெரிய மனிதராகிய சடையனாரை வந்து இருவரும் கண்டார்கள். அந்த ஊரில் கழைக் கூத்து நடத்த வந்திருப்பதாகச் சொன்னார்கள். தன்னுடைய பெண் மிக அருமையான விச்சுளிப் பாய்ச்சலில் வல்லவள் என்பதை அவளுடைய தந்தை எடுத்துச் சொல்லி, அது இத்தகையது என்றும் விளக்கினான்.

அயன்றை மக்கள் கூடினர். சடையனார் முன்னிலையில் கழைக்கூத்து நடைபெற்றது. மக்கள் வியந்து பாராட்டினார்கள். சடையனார் அந்தப் பெண்ணுக்குப் பொன்னும் பொருளும் வழங்கினார்.

"இளமையும் எழிலும் வாய்ந்த இவளை ஏன் இப்படிக் கூத்தாடும்படி பயிற்ற வேண்டும்?” என்று அவளுடைய தந்தையைக் கேட்டார்.

"எங்கள் குலத்தொழில் இது. பரதநாட்டியம் ஆடித் தம் கலைத் திறத்தைப் பெண்மணிகள் காட்டுவதில்லையா? அதுபோல நாங்கள் தலைமுறை தலைமுறையாக இந்தத் தொழிலைக் கற்று, இதையே எங்கள் வருவாய்க்கு ஆதார-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முந்நீர்_விழா.pdf/57&oldid=1207529" இலிருந்து மீள்விக்கப்பட்டது