பக்கம்:முந்நீர் விழா.pdf/67

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கவிஞனும் செழியனும்

1



புறக்கண் இல்லாமற் போனலும் அகக்கண் ஒளி படைத்த பெரியோர்கள் பலர் உண்டு. புலவர்களிலும் கண் இழந்தவர் சிலர் இருந்தார்கள். கவி வீரராகவ முதலியார் என்பவர் 16-ஆம் நூற்றாண்டின் பிற்பாதியில் வாழ்ந்தவர். பிறவியிலேயே கண் இழந்தவர். தொண்டை மண்டலத்தில் உள்ள உழலூர் என்னும் ஊரில் பிறந்தவர். இவருடைய தகப்பனார் வடுகநாத முதலியார் என்பவர்.

கண் இல்லாதவராயினும், இவருடைய அறிவு மிகவும் கூர்மையாக இருந்தது. தம்முடைய முதுகில் எழுதச் செய்து தமிழைக் கற்றார் என்று சொல்லுவார்கள்.'தன் நெஞ்சம் ஏடெனக் கற்றான் கவி முத்தமிழையுமே' என்று ஒரு புலவர், இவர் தமிழ் கற்ற சிறப்பைப் பாராட்டியிருக்கிறார்.

கம்பராமாயணம் முழுவதும் இவருக்கு மனனம் ஆயிற்று. 'இன்ன சொல் கம்பராமாயணத்தில் எங்கெங்கே வந்திருக்கிறது?’ என்று கேட்டால், அது வந்த இடங்களையெல்லாம் எடுத்து உரைப்பார். 'இன்ன உவமை எத்தனை இடங்களில் இருக்கிறது?' என்றால் அந்த இடங்களைச் சொல்லுவார். இவ்வாறு சொல்வதை அவதானம் என்பார்கள். கம்பராமாயண அவதானம் செய்வதில் சிறந்து விளங்கிய வீரராகவ முதலியாரைப் பார்த்துக் கண் உடையவர்கள் எல்லாம் வியந்து பாராட்டினார்கள். 'கண்ணினால் ஏட்டைப் படித்து மன-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முந்நீர்_விழா.pdf/67&oldid=1207553" இலிருந்து மீள்விக்கப்பட்டது