பக்கம்:முந்நீர் விழா.pdf/71

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

முந்நீர் விழா

 முறையன்று. நாடு முழுவதும் உங்கள் திறமையை அறியவேண்டும். உங்களால் இன்புறவேண்டும். ஆகையால் பல இடங்களுக்கும் நீங்கள் போய் வரவேண்டியது அவசியம். ஆனாலும், சேலத்தையும் என்னையும் மறக்க வேண்டாம். எப்போது வந்தாலும் உங்களுக்கு ஏவல் செய்ய நான் காத்திருக்கிறேன். என்ன வேண்டுமானலும் கேளுங்கள்; தருகிறேன். நீங்களே வர வேண்டும் என்பது இல்லை. காக்கையின் காலில் ஒரு சீட்டு எழுதி விடுங்கள். வேண்டியதை அனுப்புகிறேன்' என்று சொல்லி அனுப்பினான்.

கவிஞர் பல இடங்களுக்குச் சென்று புகழ் பெற்றார். அங்கங்கே உள்ள உபகாரிகளை நாடிச் செல்லும்போது கால் நடையாகவே சென்றார். சில இடங்களில் வண்டியில் சென்ரறார். இவருக்குத் துணையாக ஒரு மாணாக்கன் எப்போதும் இருந்து வந்தான்.

"இப்படி நீங்கள் அலைகிறீர்களே, ஒரு வண்டியோ குதிரையோ உங்களுக்கென்று சொந்தமாக இருந்தால் எவ்வளவு உதவியாக இருக்கும்!" என்று ஓர் அன்பர் இவரிடம் சொன்னர். இவருக்கு அது நல்ல யோசனை, யாகப்பட்டது. வண்டி வைத்துக் கொள்வதைவிடப் பெரிய குதிரையாக இருந்தால் அதை ஒட்டுகிறவன் ஒருவனும் தாமும் ஏறிச்செல்லலாம் என்று எண்ணினார். வேண்டுமானல் வண்டியிலும் பூட்டிக் கொள்ளலாம். குதிரை கிடைக்க வேண்டுமே !

அப்போது புலவருக்குச் சேலத்துச் செழிய தரையனுடைய நினைவு வந்தது. தம் கற்றுச் சொல்லியை அழைத்து, ஒலையில் எழுதச் சொல்லி ஒரு கவி சொன்னார். 'எனக்குக் குதிரை வேண்டும் என்று அக் கவியில் குறிப்பிட்டார். அந்தச் சீட்டுக்கவியின் முதலில் தம் பெருமையைச் சொன்னார். சீட்டுக் கவிகளில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முந்நீர்_விழா.pdf/71&oldid=1207561" இலிருந்து மீள்விக்கப்பட்டது