பக்கம்:முன்னும் பின்னும்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னும் பின்னும் - 99

சிங்காரக் காய்கறித் தோட்டம் - இதைச் சீராகக் காத்திடில் ஜோராகக் காய்த்திடும் மாறாத ஆனந்த மூட்டும் படம் : கனவு (1954), பாடலாசிரியர் : மருதகாசி, பாடியவர் : எம்.எல். வசந்தகுமாரி, இசை : ஜி. ராமநாதன், வி. தட்சிணாமூர்த்தி.

பல்லவி அன்பில் விளைந்த அமுதமே

அன்னமே என் கண்ணகி

அநுபல்லவி கன்னல் தெளிதேன் பாகுசீனி w கனியும் சேர்ந்த கற்கண்டா உன்மேனி (அன்) படம் : கண்ணகி (1942), பாடலாசிரியர் : உடுமலை நாராயணகவி, பாடியவர் : பி.யூ. சின்னப்பா, இசை : எஸ்.வி. வெங்கட்ராமன்.

அன்பில் விளைந்த அமுதே - என் ஆசைக் கனவும் நீயே! இன்ப நிலாவே! உனது கண்கள் இனிய கதைகள் சொல்லுதே படம் : சுகம் எங்கே (1954), பாடலாசிரியர் : அ. மருதகாசி, பாடியவர்கள் : கே.ஆர். ராமசாமி, ஜிக்கி, இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி.

来 சந்தோஷம் வேணு மென்றால்

இங்கே கொஞ்சம் என்னை பாரு கண்ணால் கொஞ்சம் பாரு கண்ணால் வண்டாட தேன் மருவும் பூ மாங்கனி பேசும் வனிதாமணி நேசம் பெறவே இனி என்னைப் பாரு கண்ணால் கொஞ்சம் பாரு கண்ணால். படம் : தேவதாஸ் (1953), பாடலாசிரியர் : உடுமலை கவிராயர், இசை : சி.ஆர். சுப்பராமன். -